Sunday, April 13, 2014

குடியால் அழியும் தமிழர் பகுதியில் வீதிக்கு வரும் குழந்தைகள் விரக்தியில்!

இலங்கையில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் வதீஸ் வருணன் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒருவர். நம்நாட்டில் தயாரிக்கப்பட்டு வெற்றிநடைபோட்ட பல சிங்கள,தமிழ் திரைப்படங்களில் இவருடைய பங்களிப்பு இருந்துள்ளது.

அத்துடன் சினிமா,புகைப்படத் துறை சம்பந்தமான பல தளங்களிலில் இருந்து தொடர்ந்தும் பணியாற்றிவரும் சிறப்பான கலைஞர்.
இவருடைய எழுத்து,இயக்கத்தில் உருவாகியுள்ள தவறிப் பிறந்த தரளம் என்ற குறுந்திரைப்படம் இலங்கையில் யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் யதார்த்தமான, வெளியில் சொல்ல முடியாத பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதாக அமைந்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றின் தாயும் தகப்பனும் ஒழுக்கம் தவறும்போது ஏற்படும் சிக்கலான சூழ்நிலையில் ஒரு சிறுவனின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை கருவாகக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Tamil-Film
Tamil-Film01
Tamil-Film02
படத்தின் ஆரம்ப காட்சிகள் ஏழையின் வீடும் வறுமையின் கோரப் பிடியும் இப்படித்தான் இருக்கும் என்பதை குறிப்பிடுகின்றன.
http://www.jvpnews.com/srilanka/65454.html

No comments:

Post a Comment