“கலை உலகத்துக்கு நானாகவும் போகவில்லை; அதுவாகவும் என்னைத் தேடி வரவில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே என்னையும் கலையையும் ஒன்று சேர்த்தது.”
“அது என்ன சூழ்நிலை, சந்தர்ப்பம்?”
“வீட்டிலே சோறில்லை; டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அப்போ அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் இன்னிக்குப் பலரைக் கலைஞர்களாக்கியிருக்கிறது. ‘பேக்ட்’டை யாரும் சொல்ல மாட்டேங்கிறானுங்க. வசதி வந்ததும் ‘ஹிஸ்ட்ரி’யையே மாத்திச் சொல்றானுங்க. ‘ராயல் பேமிலி’ங்கிறானுங்க. கலைக்காகவே அவதாரம் எடுத்ததா வேறே அளக்கிறானுங்க. என்ன செய்யறது? உண்மை உறங்குது; பொய் பொன்னாடை போர்த்திக்கிட்டு ஊர்வலம் வருது. என்னைப் பொறுத்தவரை டிராமா கம்பெனி சோறுதான் என்னை ‘ஆக்ட’ராக்கியிருக்கிறது. இதுதான் ‘பேக்ட்’.
முதன்முதலில் ராதாவிற்குப் பெரியார் யாரென்றே தெரியாது. நாடகக்கலைஞர்கள் பலரும் பச்சை அட்டை போட்ட குடியரசு புத்தகத்தை ரகசியமாகப் படிப்பதைப் பார்த்து நாடகக்கலைஞரான எதார்த்தம்பொன்னுச்சாமி(பிள
அதன்பிறகு ராதாவின் 'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' நாடகத்திற்கு பெரியாரும் அண்ணாவும் தாங்களாகவே டிக்கெட் எடுத்துக்கொண்டு நாடகம் பார்த்தார்களாம். நாடகம் முடிந்ததும் இருவரும் மேடை ஏறினர். அண்ணா "நாங்கள் நூறு மாநாடுகள் நடத்துவதும் ராதா ஒரு நாடகம் நடத்துவதும் சமம்" என்று புகழ்ந்தாராம்.
No comments:
Post a Comment