வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நேற்று மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக அனுஸ்டிக்கப்பட்டது.
நான்கு சாம பூசைகள் இடம்பெற்றதுடன் இலிங்கோற்பவருக்கு விசேட அபிஷேகமும் இடம்பெற்றதுடன் அடியார்கள் சிவலிங்கத்துக்கு தமது கைகளால் அபிஷேகம் செய்தனர்.











அத்துடன் சிவராத்திரியை சிறப்பிக்குமுகமாக ஆலய முன்றிலில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இலட்சக்கணக்கானோர் கோணேஸ்வரத்தில் குவிந்திருந்தனர்.
No comments:
Post a Comment