சில தினங்களுக்கு முன் உலகின் குள்ளமான மனிதர் என்ற சாதனைக்கு இந்தியாவில் 18 வயதுடைய பெண் ஒருவர் சொந்தக்காரர் ஆகி இருந்தார். ஆனால் தற்பொழுது அந்த சாதனையை முறியடித்துள்ளார் ஒரு தாத்தா.



இவர் நேபாள நாட்டின் தலைநகரமான காத்மண்டுவின் றீம்கோலி எனும் கிராமத்தில் வசிக்கும் சந்திர பகதூர் டான்கி என்ற 72 வயதை உடைய ஓய்வு பெற்ற நபராவார்.
மேலும் இவரின் உயரம் 56 சென்ரி மீற்றர்கள் மட்டுமே என்பதுடன், நிறையானது 12 கிலோகிராமாக காணப்படுகின்றது. இந்த குள்ளமான தாத்தாவின் சாதனையானது கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment