உடலின் எல்லா பாகங்களுக்குமான குருதியை வழங்குவதற்காக காணப்படும் பிரதான அங்கமான இதயம், உடலின் உட்புறப்பகுதியிலேயே அமைந்து காணப்படுவது வழக்கம். எனினும் றியன் மார்கியூஸ் எனும் குழந்தை உடலின் வெளிப்புறத்தில் அமைந்த இதயத்துடன் பிறந்த முதற்குழந்தை ஆவான். இச்சம்பவமானது கடந்த 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற போதிலும் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வருடத்திலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படுகின்றான். மேலம் இச்சிறுவன் வாசிங்ரன் தேசிய வைத்தியசாலையில் பிறக்கும்போது 30 வரையிலான வைத்திய நிபுணர்கள் கடமையில் இருந்ததுடன் சிசேரியன் மூலமே தாயின் கருப்பையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளான். அதன் பின் இதய அறுவைச்சிகிச்சை செய்து உடலின் உட்புத்தில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment