Monday, February 20, 2012

நாணய வடிவில் ஒரு அதிசய கட்டிடம்!!


தொழில்நுட்ப வளர்ச்சியையும், கட்டிடக்கலையின் வளர்ச்சியையும் கலந்து படைக்கப்படும் பிரம்மாண்டங்களுக்கு இன்று எல்லையே இல்லை என்று சொல்லுமளவிற்கு மனிதனின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இதை பறைசாற்றும்விதமாக சீனாவின் குவாங்கோ பகுதியில் பிறிதொரு பிரமாண்டமான கட்டிடம் அமைக்கப்படுகின்றது. லக்கி கொயின் (lucky coin) என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தினை ஒரு நாணயத்தின் வடிவில் நிர்மாணித்து வருகின்றனர்.
மேலும் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாத அளவில் திறந்து வைக்கப்படவுள்ள இக்கட்டிடமானது 138 மீற்றர் உயரத்தினையும், 47 மீற்றர் விட்டத்தினையும் கொண்டு காணப்படுவதுடன், இதற்காக 159 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment