Saturday, February 11, 2012

1623 முதல் 1659 வரை மதுரையை தலைநகராக கொண்ட மன்னர் திருமலை நாயக்கர்


1623 முதல் 1659 வரை, சுமார் 36 ஆண்டுகள், சிறப்பாக‌ மதுரையை தலைநகராக கொண்டு ஆண்ட, அரசர்களில் மிகவும் ராஜதந்திரம் மிக்கவராகத் திகழ்ந்த மன்னர், காட்பாதர் என்று கூட சொல்லலாம்...திருமலை நாயக்கர்.

ஒரு சமயம் மைசூர் மன்னர் கண்டீரவ நரச ராஜா,மதுரை மீது படையெடுத்து, வரும் வழியில், பிடிபட்ட ஊர்களில் இருந்த வீரரகளின் மூக்கை, மேலுதட்டுடன் அரிந்து வருபவர்களுக்கு தங்கத்தட்டு என்ற பரிசையும் அறிவித்து, அந்த வீரர்கள், பல அட்டூழியங்கள் புரிந்து விட்டனர்.
அவ்வமயம் 70 வயதுக்கு மேல் ஆன போதிலும், மனது தளராமல், திருமலை மன்னர்,தனது நண்பரான‌ ராமநாதபுரம் மன்னர் "ரகுநாத சேதுபதி" அவர்களின் உதவி கோறி, 6 மணி நேரத்தில், மிக நவீன துப்பாக்கி மற்றும் பீரங்கிகளை கையாள‌த் தெரிந்த 20 ஆயிரம் சிறந்த படை வீரர்களைத் திரட்டி, மதுரையின் 30 ஆயிரம் படை வீரர்களுக்கு முன்பாகவே, ஒரு பெரும் கோட்டைச் சுவர் போல் அரணாக இருந்து, கடும் போர் புரிந்து, இருபுறமும், பெருத்த சேதத்திற்கு பின்னர், மைசூர் படைகள் ஓட ஓட விரட்டப் பட்டனர்.

பின்னர் மன்னர் திருமலை, மன்னர் சேதுபதி மற்றும் 18 பாளையப் படைகளின் துணையுடன், மைசூரின் மீது படையெடுத்து, வென்று, பிடிபட்ட வீரர்களின் மூக்கை அரிந்து, பழிக்கு பழி வாங்கினார் என்பவை சரித்திரம்.!

தக்க சமயத்தில், ராணியின் கடிதம் கண்டு உதவியதால், "ராணி சொல் காத்தார்" என்ற பட்டத்தையும், "திருமலை சேதுபதி" என்ற பட்டத்தையும் வழங்கி, ராமநாதபுரத்திலும், நவராத்திரி விழா, மதுரை போன்றே சிறப்பாக நடைபெற உரிமை வழங்கினார் என்பவையும் வரலாற்று தகவல்கள். சரித்திரத்தில், இந்த 2 யுத்தங்களும், "மூக்கறுப்பு யுத்தம்" ( வார் ஆப் நோசஸ்) என்ற பெயரைப் பெற்றன.

தன் ஒப்பற்ற கலை ஆர்வத்தால் மதுரை நகரைக் கலையழகு கொஞ்சும் நகரம் ஆக்கியதுடன், திருவனந்தபுரம், மைசூர் அரசுகள் மட்டுமன்றி, விஜயநகரத்தையும் போரிட்டு வென்று, "நாயக்க மன்னர்" களில் சிறந்தவர் என்று பெயர் பெற்ற இவரது காலத்தில், "மறவர் சீமையில்" முழு அமைதி நிலவியது என்பவைகளும் சரித்திரச் சான்றுகள் என்பதை நாம் அறிவோம்.
முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584ம் ஆண்டில் பிறந்த மன்னர் திருமலையின் இயற் பெயர், திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு என்பதாகும். இன்று அவரது 428ம் பிறந்தநாள்.

1 comment: