Saturday, February 11, 2012

பூஜை செய்து பரப்பரப்பை ஏற்படுத்திய நாகப் பாம்பு!


தெப்பெருமநல்லூர் கோவிலில்,வேத நாயகி சமேத விஸ்வநாத சுவாமிக்கு வில்வ இலைகளால் பூஜை செய்து பரப்பரப்பை ஏற்படுத்தியது ஒரு நாகப் பாம்பு.சைவ புராணங்களில், சைவ சாத்திரங்களில்,யானை,சிலந்தி,மயில்,குரங்கு என்று பல விலங்குகள் சிவ பூஜை செய்து முக்தியடைந்ததாக கூறுகின்றன. ஆனால்,அதெல்லாம் புளுகு ,பார்ப்பன சூழ்ச்சி,ஆர்ய சூழ்ச்சி,மூட நம்பிக்கையென்று திராவிட நாத்திகர்கள் எள்ளி நகையாடுகின்றனர்.ஆனால்,2010இல் சிவ பூஜை நடத்திய இந்த நாகத்தை என்ன சொல்லலாம் ? இதுவும் புளுகு,ஆர்ய மாயையா ? இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள் திராவிட நாத்திகர்களே ? எதாவது அறிவியல் ஆதாரத்தைக் கொடுங்கள் ? அதுவும்,நடக்கவிருக்கும் சூரிய கிரகணத்துக்கு சில நேரத்துக்கு முன்,சிவ பூஜை செய்தால் அதிக புண்ணியம் கிட்டும் காலத்தின் போது,இந்த நாகப் பாம்பு வில்வ இலைகளால் எம்பெருமானை பூசை செய்திருக்கிறது..ஏன் அந்த குறிப்பிட்ட காலத்தில் இந்த மாதிரி செய்ய வேண்டும் ? இதன் மூலம்,சைவ புராணங்களில்,பல விலங்குகள் சிவ பூசை செய்தது உண்மையே . 

No comments:

Post a Comment