Saturday, February 11, 2012

படிக்காத மேதை தாமஸ் ஆல்வா எடிசன்!!


படிக்காத மேதை தாமஸ் ஆல்வா எடிசன்: மாலை மின் தடை இல்லாமையால் ஒரு சிறப்பு பகிர்வு.

ஆசிரியர் திட்டியதால் பள்ளிக்குச் செல்லாமல், தாயிடமே கல்வி கற்று, பின்னர் டெட்ராய்ட் நகரின் ரயில்வே ஸ்டேஷனில் பேப்பர் மற்றும் காய்கறி விற்கும் சிறுவனாக இருந்து கொண்டே, அறிவியல் ஆர்வத்தால், அருகில் இருந்த பழைய குட்ஷெட்டில், ஸ்டேஷன் மாஸ்டரின் கருணையால், ஒரு சயின்ஸ் லாபரேட்டரி அமைத்து, ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்த நிலையில், ஒரு சமயம் திடீரென ஏற்பட்ட பாஸ்பரஸ் விபத்தால், லாப் தீப்பிடித்து, சேதமடைந்து, மாஸ்டரிடம் பளாரென கன்னத்தில் அடி வாங்கி, வாழ்நாள் முழுதும் ஒரு காது கேட்க்காமல் இருந்து, சக சிறுவனின் உயிரைக் காப்பாற்றி, அதே மாஸ்டரின் உதவியால், தந்தி அனுப்பும் முறையை கற்று ( மோர்ஸ் கோட்), அதனையே தானியங்கி கருவியாக டெவலப் செய்து, பின்னாளில் உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவான "தாமஸ் ஆல்வா எடிசன்." இவரைப் பற்றி அனைத்து சங்கதிகளுமே இணையத்தில் உள்ளதால், சில தெரிவு செய்யப்பட்ட குறிப்புகள் மட்டும்.

1. டெலிகிராப் ஆபரேட்டர் வேலையில் இருந்து விலகி, நியூயார்க் சென்று, ஆய்வுகள் மேற்கொண்டு கண்டுபிடித்த "போனோகிராப்' மிகவும் புகழ் பெற்றது. தொடர்ந்து, டேப் ரெகார்டர், ஆட்டமேடிக் டெலிகிராப் போன்ற கண்டுபிடிப்புகள் மூலம் ஒரு சிறந்த விஞ்ஞானியாக மட்டுமன்றி, இயற்கையிலேயே இவரிடம் அமைந்திருந்த வியாபார நுணுக்கம் மூலம், அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில் அதிபராக உயர்ந்தார் என்பவை சரித்திரம்.

2. எடிசனின் அற்புத கண்டுபிடிப்பு..."எலக்ட்ரிக் பல்ப்" மட்டுமல்லாமல், டெலி பிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா...போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகள். அமெரிக்காவில் மட்டுமன்றி, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் தனது கண்டுபிடிப்புகளுக்கு பேடன்ட் பதிவு செய்து தனது மார்கெட்டிங் திறமை வெளிப்படுத்தினார்.!

3. சரித்திரத்தில் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு 1300க்கும் மேற்ப்பட்ட அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்த எடிசனின் "ஜெனரல் எலக்டிரிக் கம்பெனி "தான் இன்றளவும் உலகின் அதிக பேடன்ட்டுகளை (1093 பேடன்ட்ஸ்) வைத்துள்ளது.!

4. கண்டுபிடிப்புகளின் தந்தை எடிசனின் தாரக மந்திரம் :“மனித வாழ்க்கையை அழிக்ககூடிய எந்த கண்டுபிடிப்பையும் நான் செய்ய மாட்டேன், ஏனெனில் மக்களை மகிழ்விக்க வேண்டுமென்பதே எனது நோக்கம்”.!
விஞ்ஞான மேதை எடிசனின் உயர்ந்த நோக்கத்தின் நன்மைகளை, அவர் சிந்திய வியர்வையின் பலனை, இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.(இப்ப இதை சொல்லக்கூடாது, காலக்கிரகம் அதான் ராமுச்சூடும் கரண்டு இல்லையே.!)

இன்று அந்த மாபெரும் அறிவியல் மேதை " தாமஸ் ஆல்வா எடிசனின்" 165ம் பிறந்தநாள். அதனால் தானோ என்னவோ தெரியவில்லை, இன்று வழக்கமாக மாலையில் மின்தடை இல்லை.! எல்லாம் அந்த அம்மையாருக்கே வெளிச்சம்.

No comments:

Post a Comment