Saturday, October 21, 2023

அறியப்படாத யாழ்ப்பாணம்

 


அறியப்படாத யாழ்ப்பாணம்

//ஒரு பெயர் தெரியாத யாழ்ப்பாண முதியவரின் நாட்குறிப்பில் 1841 ஆண்டிலிருந்து 1933 ஆண்டு வரை நடந்த முக்கியமான சம்பவங்களை பதிவு செய்து இருந்தார்
பார்க்க கீழே//
1841 'உதயதாரகை" (Morning S அமெரிக்கன் மிஷனாரால் வெளியிடப்பட்டது
. 1842. யாழ்ப்பாண வாசிகசாலை திறக்கப்பட்டது.
1847. மானிப்பாய் 'கிறீன்' வைத்தியசாலை ஆரம்பம்.
1850. யாழ்ப்பாணத்தில் F.N.S. வைத்தியசாவை ஆரம்பம்
1853.(]) திரு. வைமன் கதிரவேற்பிள்ளை அவர்கள் "Literary wirror" என்னும் பத்திரிகை வெளியிடபட்டது.
இப்பத்திரிகை பின்னர் "இலங்கைத் தேசா டானி" (The Ceylon Patriot) யாக மாற்றப்பட்டது.
(2) யாழ்ப்பாணத்தில் நிழலுருவப்படம் பிடிக்கும் அமெரிக்கன் மிஷனாராற் காட்டப்பட்டது.
1858. பேதிப் பிரளயம்
1868, இலங்கைத் தேசாபிமானி' (The Ceylon Patriot)
வெளியிடப்பட்டது.
1866. யாழ்ப்பாணத்தில் பொலிஸ்தானம் ஸ்தாபிக்கப்பட்டது.
1876. "சத்தியவேதபாது காவலன்"(The Catholic Guardian) என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது.
1879. ஆறுமுகநாவலரின் பிரிவு
1880. (1) நாயன்மார்சட்டு ஆயுள்வேதவைத்தியசாலை ஆரம்பம் (
2) யாழ்ப்பாணம் சுப்பிறீங் கோட்டில் மாகாணத்தலைவர் சேர். வில்லியம் துவைனம் அவர்களின் பரிபாலனத்தை தூஷித்து "Ceylon Examiner" என்னும் பத்திரிகையில் எழுதியதற்காக திரு. லூடோவிக்கி என்னும் பத்திராசிரியருக்கு ரூபா. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.
1884. (1) கிறீஸ்த வாலிப சங்கம் (Y.M.C.A.) வட்டுக் கோட்டையில் நிறுவப்பட்டது.
(2) யாழ்ப்பாணத்தில் புயல்காற்றால் பெருஞ் சேதம்.
1889. சைவபரிபாலன சபையாரால் "இந்துசாதனம்" (The Hindu Organ) பத்திரிகை வெளியிடப்பட்டது.
1894 (மாசிமீ 3உ) யாழ்ப்பாணத்தில் பூகம்பம். ல்
1895. "இந்து சாதன" (Hindu Organ) பத்திராசிரியர் சத்திய தவேதபாதுகாவலன்' (Catholic Guardian) பத்திரா சிரியர்மீது வைத்த மானநஷ்டத்தாட்சி சுப்பிறீங்கோட்
டில் விசாரணை செய்யப்பட்டு விடுதலையடைந்தது.
1898, இணுவில் பெண் வைத்தியசாலை ஆரம்பம்.
1902. (1) யாழ்ப்பாண புகையிரத வீதி சேர்.றிச்வே தேசாதிபதி யவர்களால் திறக்கப்பட்டது.
(2) சுன்னாகத்தில் சுண்ணாம்பால் செய்யப்பட்ட புத்தரின் உருவம் Dr. போல் ஈ பீரிஸ் அவர்களால் புதைக்கப்பட்ட விடத்திலிருந்து கிளறி எடுக்கப்பட்டது,
1903. இந்துவாலிபர் சங்கம் வண்ணார்பண்ணையில்
பட்டது.
1906. "யாழ்ப்பாணச் சங்கம்" நிறுவப்பட்டது.
1907. 'யாழ்ப்பாண F.N. S. வைத்தியசாலை அரசின
சிவில் வைத்தியசாலையாக மாற்றப்பட்டது.
1912. திரு. அலன் எபிரகாம் என்னும் யாழ்ப்பாண தமிழ் கணிதவிற்பன்னர் லண்டனில் F. R. A. S. ஆக தெரியப்பட்டது.
1916. புதைக்கப்பட்டிருந்த திரவியமெடுப்பதற்காக வண்ணாபண்ணையில் மனித பலி
(1917.சுன்னாகத்தில் பாழாயிருந்த புத்தகோயிலின் அடிக்கட்டிடம் Dr.போல் ஈ.பீரிஸ் அவர்களால்கண்டுபிடிக்கப்பட்டது.
1918. யாழ்ப்பாணத்தில் புயல்காற்றும் பெருவெள்ளமும்.
1922.(1) ஸ்ரீமதி. சரோஜினி தேவியின் யாழ்ப்பாண விஜயம்
(2) சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவரின் பிரிவு.
1925. மாணவ மகாநாடு (பின்னர் வாலிபமகாநாடு) நிறுவப்பட் டது.
1920: மதுப்பானக்கடைகள் மூடப்பட்டன.
1931. (1) 'வலிகாமம் வடக்கு வாலிபர் சங்கம்' நிறுவப்பட்டது
(2) கமலாதேவியின் யாழ்ப்பாண விஜயம்.
(3) வாலிபமகாநாட்டாரால் அரசாங்கசபை பகிஸ்கரிக்கப்பட்டது
(4) பண்டிதர் ஜவகர்லால்நேரு, கமலா நேரு,இந்திரா நேரு
யாழ்ப்பாண விஜயம்.
1932 யாழ்ப்பாணத்துக்கு மின்சார வெளிச்சம்.
1933. (1) வடமாகாணத்துக்கு முதன் முறை இலங்கை (திரு. எட்மன்ட் றோட்றிக்கோ) மாகாணத் தலை
(2) “பிப் பிரஸ் ' பத்திரிகை வெளியிடப்பட்டது.
(3) யாழ்ப்பாணப் பெரிய கோட்டு நீதிபதியாக முதல் முறையாக யாழ்ப்பாணத் தமிழர் திரு.சி. குமாரசாமி நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment