Thursday, November 28, 2019

கனடாவில் இருந்து வந்த யாழ் தமிழர் கொழும்பில் கடத்தப்பட்டு கொலை!! அதிர்ச்சியில் புலம்பெயர் சமூகம்!! - IBCTamil


கனடாவில் வசித்துவந்த தம்பிராஜா அம்பலவானர் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் இலங்கை வந்த போது கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் தினத்திற்கு முந்திய தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கடத்தப்பட்ட அவரது சடலம் புத்தளத்தில் இரயில் தண்டவாளங்களுக்கு இடையில் போடப்பட்டிருந்தது. சித்ரவதை செய்யப்பட்ட காயங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கொலைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.
இதேவேளை, இந்த படுகொலை விவகாரம் இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படாததானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.
இலங்கையில் முதலீடு செய்வதற்காக அங்கு செல்வதற்கு தயாராக இருக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை இந்தப் படுகொலை பற்றிய செய்தி தோற்றுவித்திருக்கின்றது.


https://www.ibctamil.com/canada/80/132052?ref=imp-news





No comments:

Post a Comment