Saturday, September 14, 2019

சுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் !


சுவிட்சர்லாந்தின் பெர்ன் பிராந்தியத்தில் தமிழ் மத போதகர் ஒருவரால் சிறுமிகள் பலர் சீரழிக்கப்பட்ட சம்பவம் உள்ளூர் ஊடகம் ஒன்றால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தீய ஆவியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளை மட்டுமே தாம் காப்பாற்றுவதாக இந்த குற்றச்சாட்டுக்கு அந்த 62 வயது மத போதகர் விளக்கமளித்துள்ளார்.
பெர்ன் மண்டலத்தில் செயல்பட்டு வரும் Tamil free church என்ற தேவாலயத்தின் முன்னாள் உறுப்பினர்களே குறித்த மத போதகர் தொடர்பில் அதிரவைக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
பல பெண்கள் அந்த 62 வயது போதகர் தொடர்பில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தற்போது உள்ளூர் ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பெர்ன் மண்டலத்தின் Köniz பகுதியில் குடியிருக்கும் அந்த மத போதகர், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன்,
அவர்கள் மீது தீய ஆவியின் சகவாசம் இருப்பதை உணர்ந்தே அவர்களை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.

தமக்குள் இருக்கும் கடவுளின் வல்லமையே, அதுபோன்ற தீய ஆவிகளை துரத்த தமக்கு உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி பெண் ஒருவர் தமது விருப்பத்துடன் அந்த மத போதகருடன் உறவு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பெண், தமக்கு அப்போது இள வயது எனவும், அன்பின் உச்ச நிலை அது என்பதால் எதுவும் தவறில்லை என அந்த மத போதகர் தம்மிடம் தெரிவித்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
தமது செயலுக்கு விவிலிய ரீதியில் விளக்கமளித்துள்ள அந்த மத போதகர், தமது பதவியை களங்கப்படுத்தியுள்ளார்.
Tamil free church என்ற தேவாலயத்தை நிறுவியுள்ள அவர், சுவிஸ் மட்டுமின்றி பல நாடுகளில் கிளை தேவாலயங்களையும் நிறுவியுள்ளார்.

இந்த கிளை தேவாலயங்களில் அடிக்கடி விஜயம் செய்யும் இவர், இரவு சிறுமிகளுடன் தங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமது 13 வயதில் குறித்த மத போதகரால் சீரழிக்கப்பட்டதாக கூறும் பெண் ஒருவர், அப்போது நடந்த சம்பவம் தற்போதும் தம்மை வேட்டையாடி வருவதாக கண்கலங்கியுள்ளார்.
இதனிடையே முழு நேர மத போதகராக பணியாற்றி வந்தும் அரசின் உதவித்தொகையை அவர் கைப்பற்றி வந்ததும் தற்போது அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து போலியான ஆவணங்களை செலுத்தி அரசின் உதவித்தொகை பெற்று வந்ததாக கூறி அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தேவாலயத்தின் வருவாயில் அவர் மோசடி செய்துள்ளதாகவும், முன்னாள் உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

https://news.lankasri.com/swiss/03/211589?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment