Thursday, September 26, 2019

திரு தம்பையா பத்மநாதன் மரண அறிவித்தல்!!





யாழ். கொக்குவில் சம்பியன் லேனைப் பிறப்பிடமாகவும், புத்தளம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா பத்மநாதன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
 
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, சோதிமதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவசம்பு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
புவிராஜ், லதா, சுதா, பிருதிவிராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பாலசுப்ரமணியம், கமலாதேவி மற்றும் சரோஜனிதேவி, கிருஷ்ணலீலா, ரஞ்ஜனா, தவஜோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
சதானந்தன், அற்புதராஜா, ரஜனி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற கனகசபை, சோமசுந்தரம், அன்னபூரணம், காலஞ்சென்ற சிவபாக்கியம், பாலசுந்தரம், காலஞ்சென்ற ராஜசுந்தரம், ஞானசுந்தரம், கனகசுந்தரம், ஜெயசுந்தரம், காலஞ்சென்ற மீராவதி, சிவசுந்தரம், பிரேமாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 
கிரி, லிஷாந்த், ஜிரோஷன், வினுஷன், லக்‌ஷனா, சஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்


சமூக சேவையினை உயிர் மூச்சாக வாழ்ந்து பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்த அன்பு உள்ளமான  பத்மநாதன்  வரலாற்றின் நினைவுடன்......                                 
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் கொக்குவிலில் புகழ் பூத்த சீமான் திரு.தம்பையா அவர்தம் பாரியார் சோதிமதி அவர்களின் அன்பு மகனாக 08/Mar/1936 ஆம் ஆண்டில் திரு.பத்மநாதன் அவர்கள் இவ் அழகிய பூமியில்  அவதரித்தார்.                                            
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தந்தையுடனும் அன்னலட்சுமி, பாலசுப்ரமணியம், கமலாதேவி, சரோஜனிதேவி, கிருஷ்ணலீலா, ரஞ்ஜனா, தவஜோதி போன்ற உடன்பிறப்புகளுடன் சேர்ந்து சொந்தத் தொழில் செய்து உயர்நிலை அடைந்த இவர்  திரு.திருமதி சிவசம்பு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளான சரஸ்வதி  அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக புவிராஜ், லதா, சுதா, பிருதிவிராஜ்  எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று அன்பாக வளர்த்து சதானந்தன், அற்புதராஜா, ரஜனி, கவிதா போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து கிரி, லிஷாந்த், ஜிரோஷன், வினுஷன், லக்ஷனா, சஜன் போன்ற  பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                                 
மேலும் புத்தளம் நீர்ப்பாசனத் திணைக்கள நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் கனடாவில் நூலகர் - TESOC ஆகவும் விளங்கியதுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பெறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர் நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 19.09.2019 இல் 83 வயதில் கனடாவில் உள்ள Scarborough  நகரத்தில்  இறைபதம் அடைந்தார் அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கண்ணாடி வதனமே
கலங்காத சிறந்த அதிகாரியே
விண்ணில் பரவும் ஒளியே
கண்ணில் படும் காட்சியே
அன்னலே எம் வள்ளலே
மண்ணில் நீங்கள் முத்து - எமது
மனங்களின் சொத்து

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

 
சுதா அற்புதராஜா - மகள்
 
பிருதிவிராஜ் - மகன்
 
புவிராஜ் - மகன்
 
லதா சதானந்தன் - மகள்



No comments:

Post a Comment