Tuesday, May 7, 2019

திரு சின்னத்தம்பி இராசையா மரண அறிவித்தல்!


யாழ். கொக்குவில் நந்தாவில்லைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bickley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி  இராசையா அவர்கள்  05-05-2019  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.   
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின்  பாசமிகு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கனகரட்ணம், மேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலஷ்மி(திலகா) அவர்களின் அன்பு கணவரும், 
ஜனனி, Dr. ஜேன்தாரணி, கிருஷாந்தி, அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
பிரசான் அவர்களின் அன்பு மாமனாரும்,
வரம், எய்டன்  ஆகியோரின்  அன்புப்  பேரனும், 
பரமேஸ்வரி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), செல்வராசா(ஐக்கிய அமெரிக்கா), தனலஷ்மி(ராசத்தி- கனடா), சகுந்தலாதேவி(கனடா), ரதிதேவி(லண்டன்), பத்மினிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  
காலஞ்சென்ற  செல்லப்பாபிள்ளை, சிவராசா(இலங்கை), கலா(ஐக்கிய அமெரிக்கா), குணபாலசிங்கம்(கனடா), உருத்திரன்(கனடா), பாஸ்கரன்(லண்டன்), ராஜலிங்கம்(கனடா), இலங்காதிலகம்(டென்மார்க்), சத்தியவந்தன்(கனடா), சர்வகலாநிதி(லண்டன்), ஜெயலஷ்மி(கனடா), சத்தியமூர்த்தி(ஜேர்மனி), சத்தியலிங்கம்(கனடா), சத்தியகீர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.  
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.   
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
திலகா - மனைவி
 
அகிலன் - மகன்
 
ஜேன் - மகள்
 
பரம் - சகோதரர்
 
சாந்தா, உருத்திரன்
 
சிவபாலன் - மைத்துனர்
 
செல்வராசா - சகோதரர்

No comments:

Post a Comment