Thursday, December 27, 2018

கிறிஸ்துமஸ் தினத்தன்று மகாராணியின் உரையை பார்த்தவர்கள் இத்தனை பேரா?


கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரித்தானிய மகாராணியாரின் உரையை 6.3 மில்லியன் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
BBC தொலைக்காட்சியில் 5.2 மில்லியன் பார்வையாளர்களும் ITVயில் 1.1 மில்லியன் பார்வையாளர்களும் மகாராணியாரின் உரையை கண்டு களித்துள்ளார்கள்.
கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் குறித்த பாரம்பரியங்கள் குறித்து தனது உரையை தொடங்கும் மகாராணியார், தனது தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டு, தனது மகன் சார்லஸின் பிறந்தநாள், தனது பேரக்குழந்தைகளின் திருமணம், அரண்மனையில் புதிதாக பிறந்துள்ள குழந்தைகள், பிறக்கப்போகும் குழந்தை என பல விடயங்கள் குறித்து உரையாடுகிறார்.

அன்றைய தினம் Michael McIntyre என்பவரின் Big Christmas Show என்னும் நிகழ்ச்சி 6.1 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.
பிரபல நடன நிகழ்ச்சி ஒன்று, ஜங்கிள் புக் என்னும் குழந்தைகளுக்கான திரைப்படம் என பல நிகழ்ச்சிகள் அதிகம் பேரால் பார்க்கபட்ட நிலையில், மகாராணியாரின் உரை அனைத்தையும் தாண்டி 6.3 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

https://news.lankasri.com/uk/03/195007?ref=ls_d_uk

No comments:

Post a Comment