Wednesday, December 19, 2018

சற்றுமுன்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது அதிநவீன உத்தரதேவி! (புகைப்படங்கள்)


நவீன வசதிகளுடன்கூடிய புதிய உத்தரதேவி தொடருந்து சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தை வந்தடைந்தது.
குறித்த தொடருந்து இலங்கை தொடருந்து திணைக்களத்தால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம்-கொழும்பு தொடருந்து மார்க்கத்தில் உத்தரதேவி சேவையாக இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு என பிரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வகுப்பும் நீளமானதாக அமைந்துள்ளதுடன் முதலாம் வகுப்பில் தானியங்கி கதவு, குளிரூட்டி, தொலைக்காட்சி, மற்றும் USB வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது தொடருந்தில் இலத்திரனியல் வேலைப்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் எதிர்வரும் 28ஆம் நாளிலிருந்து தனது முதலாவது பயணத்தை யாழ்ப்பாணத்திலிருந்தும் கொழும்பிலிருந்தும் பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






















https://www.ibctamil.com/srilanka/80/111065?ref=ls_d_ibc

No comments:

Post a Comment