Sunday, September 9, 2018

தன் பாலின ஈர்ப்பு தவறானதில்லை - சாரு நிவேதிதா பேட்டி.!

ஓரினச்சேர்க்கைக்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தினை உச்ச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கியது முதலே அந்த தீர்ப்பினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல வகையான கருத்துக்கள் அனைவராலும் முன் வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், ஓரினசேர்க்கை ஒன்றும் தவறானதில்லை என தெரிவித்துள்ளார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. பல வருடங்களுக்கு முன்னர் நான் தன் பாலின ஈர்ப்பு குறித்துப் பேசியபோது பலரும் என்னை எதிர்த்தார்கள். ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு அதைப் பற்றியப் புரிதல் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், தன் பாலின ஈர்ப்புகொண்டவர்களை பலரும் `ரேப்பிஸ்ட்' என நினைக்கிறார்கள். ஒருவர் Gay என்பதால் அவர் எல்லா ஆண்களையும் கையைப் பிடித்து இழுப்பார் என நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களை பொதுச்சமூகம் கிண்டலும் கேலியும் செய்வது, அவர்கள் அருகில் அமரத் தயங்குவது என்ற மனப்பான்மை பொதுச்சமூகத்துக்கு உள்ளது.
Gay ஆக இருப்பவர்கள் அனைத்து ஆண்களையும் தவறாகப் பார்ப்பவர்கள் அல்ல. தான் விரும்பும், தன்னை விரும்பும் தன் பாலினத்தை மட்டும் நேசிக்கும் காதலுணர்வுகொண்டவர்கள். இது இயல்பானது. ஆண்-பெண் உறவு நிலையில் உள்ளவர்களைப்போலத்தான் இதுவும். வெளிநாடுகளில் திருமணம் செய்துகொண்ட இரு ஆண்களோ, இரு பெண்களோ மற்ற தம்பதியைப்போலத்தான் வாழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் சாரு.

https://www.ibctamil.com/india/80/105889?ref=rightsidebar

No comments:

Post a Comment