Sunday, September 9, 2018

60,000 வருடங்களாக வெளி உலக தொடர்பில்லாமல் வாழும் ஒரு திகில் தீவு! வெளிநாட்டவர் யாரும் நெருங்கினால் உயிர் போகும் ஆபத்து?

இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தவர் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்து அங்கு தொடர்ந்து வாழ்கின்றனர்.
மிகவும் அழகு நிறைந்த தீவு என்பதுடன் வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்ற தீவாகவும் உள்ளது.
இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக வடக்கு சென்டினல் தீவு இருக்கின்றது.
உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.


பூமியில் நவீன நாகரீகத்தின் காலடி படாத ஒரே இடம் இதுதான் என்று கூறுகிறார்கள்.
வெளியுலக வாசிகளை இங்குள்ள மக்கள் தீவில் காலடி எடுத்து வைக்க அனுமதித்ததில்லை. யாரேனும் வந்தால் இவர்களின் ஈட்டி, வில் அம்புக்கு இரையாக வேண்டியதுதான்.
இந்த தீவில் இருக்கும் பழங்குடியினர் ஆபிரிக்காவில் இருந்து வெளியேறிய முதல் மனிதர்களின் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.
இவர்களின் மொத்த சனத்தொகை பற்றிய அளவு இன்னும் தெரியவரவில்லை.
இந்த தீவில் இருக்கும் மக்கள் வெளிநாட்டவர்கள் யாரையும் உள்ளே விடுவதில்லை. கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் இந்த தீவு கடுமையாக தாக்கப்பட்டது.

அந்த சமயத்தில் இந்தியா அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அந்த விமானத்தை அம்புகளாலும், வேல்களாலும் தாக்க முயற்சி செய்துள்ளனர் . இதனால் உதவி செய்ய முடியாமல் மீண்டும் திரும்பி விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1896ஆம் ஆண்டு அந்தமான் சிறையில் இருந்து தப்பித்த கைதி ஒருவர் தவறுதலாக இந்த தீவுக்கு போயுள்ளார். அங்கு போன அந்த கைதியை இரண்டு நாட்களுக்கு பிறகு இறந்த நிலையில் பிணமாகத்தான் மீட்க முடிந்துள்ளது.

இந்திய அரசாங்கம் பல வருடங்களாக இந்த மக்களை பற்றியும் இவர்களுடைய வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்ள பலமுறை இந்த தீவுக்கு பரிசு பொருட்கள், தேங்காய் போன்ற உணவுப் பொருட்களுடன் சென்றுள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்து தான் திரும்பியுள்ளனர்.
கடந் 1974ஆம் ஆண்டு இந்த தீவைப் பற்றியும், இங்குள்ள மக்களைப் பற்றியும் தெரியப்படுத்த பல எச்சரிக்கைகளையும் மீறி அந்த தீவுக்கு ஒரு குழுவினர் சென்றுள்ளனர். ஆனால் அவர்களும் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் திரும்பி வந்துள்ளனர்.

1991ஆம் ஆண்டு ஆய்வு நடத்துவதற்காக சில ஆராய்ச்சியாளர்கள் அந்த தீவுக்கு சென்ற போது யாருமே எதிர்பார்க்காத முகமாக அந்த மக்களில் ஒரு பகுதியினர் முன் வந்து. ஆராய்ச்சி செய்யப் போனவர்களிடம் தொடர்பு கொண்டுள்ளனர்.
இது ஒரு பெரிய வெற்றியாக நினைத்த ஆய்வாளர்கள் இவர்களை பற்றி தெரிந்து கொள்ள மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக நம்பினர்.
ஆனால் 2006ஆம் ஆண்டு பழையது போலவே பிரச்சினைகள் தொடர அத்தீவை பற்றியும், அங்குள்ள மக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய முற்றிலும் நிறுத்தி விட்டனர். அது அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளாக மாறிவிட்டது.

யாரேனும் வந்தால் அவர்களை எதிரியாக மட்டுமே இங்குள்ள மக்கள் பார்க்கிறார்கள். எனவே தான் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள், கொல்கிறார்கள்.
மேலும் வெளியுலக மக்களால் தங்களது கலாச்சாரம், இனம் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலும், அதைக் காக்கும் வகையிலுமே இவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள்.
அதன் பிறகு இத்தீவுக்கு வெளிநாட்டவர் யாரும் போக முடியாத தீவாக தடை செய்யப்பட்டது. இந்த தீவை பற்றிய மர்மங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
வெளியுலக நாகரீகம் இந்தத் தீவை தீண்டாமல் இருப்பதால் தான் இந்த மக்கள் இவ்வளவு காலமாக இங்கு தாக்குப் பிடித்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. இதுவே தொடரட்டும் என்று இந்திய அரசும் விட்டு விட்டது.
இருப்பினும் இந்த பூர்வகுடி மக்கள் இனம் காப்பாற்றப்பட வேண்டும், கற்கால மனிதர்களின் கடைசி சந்ததியான இந்த மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறைக் குரலும் கேட்டபடியே உள்ளது.



https://www.manithan.com/india/04/186560?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment