Tuesday, May 22, 2018

பல உயிர்களை பலியெடுத்த நிபா வைரஸ்! எங்கிருந்து வந்தது?


ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக உயிர்களை காவு கொண்ட நிபா எனும் வைரஸானது தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்திலேயே முதன் முதலாக “நிபா வைரஸ்” கண்டுபிடிக்கப்பட்டது.
மலேசியாவிலுள்ள நிபா கிராமத்தில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக இறந்தனர்.
இந்நிலையில் அவர்களின் ரத்தத்தை சோதனை செய்து பார்த்த போதுதான் இந்த வைரஸ் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் இதற்கு நிபா வைரஸ் என பெயரிடப்பட்டது.
1998-99-ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூரில் நிபா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு வங்காள தேசத்திலும் பரவியது.
இதை தொடர்ந்து இந்தியாவில் கேரளா உள்பட மலைப் பிரதேசங்கள் கொண்ட மாநிலங்களிலும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு பல உயிர்களை பறித்துள்ளது.
நிபா வைரஸ் எவ்வாறு பரவுகின்றது?
வவ்வால்கள், பன்றிகள் மூலம் பரவுவதாக கண்டறியப்பட்டது.
வவ்வால்களின் சிறு நீரகம், உமிழ் நீர், முகம் ஆகிய இடங்களில் இருந்து நிபா வைரஸ் உற்பத்தியாகிறது.
இந்த வவ்வால்கள் கடித்த பழங்களை தின்னும் போது மற்ற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பரவுகிறது.
வவ்வால்கள் கடித்த பழங்களை தின்னும் விலங்குகளின் சிறுநீர், உமிழ் நீர் படுவதன் மூலமும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
நிபா வைரஸ் பன்றி, பூனை, நாய், குதிரை உள்ளிட்ட விலங்குகளுக்கும் இந்த விலங்குகளுடன் பழகுவதன் மூலம் மனிதர்களுக்கும் நோய் தொற்று எற்பட வாயப்பு உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

நிபா வைரஸின் அறிகுறிகள்

நிபா வைரஸ் 5 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
காய்ச்சல், தலைவலி, சோர்வு, மனக்குழப்பம் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.
நோய் தீவிரம் அடையும் போது நோயாளி சுய நினைவை இழப்பார்.
அதைத் தொடர்ந்து அவர்களது நரம்பு மண்டலம் மற்றும் சுவாச மண்டலம் ஆகியவை பாதிக்கப்படும்.
நோயாளி உயிரிழக்க நேரிடும்.

http://news.lankasri.com/disease/03/179351?ref=ls_d_lifestyle

No comments:

Post a Comment