Sunday, May 20, 2018

பிரபாகரன் தென்னிலங்கைக்கு எதிரானவர் அல்ல! ராஜபக்ஷ அறிவிப்பு..


கடந்த காலங்களில் பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகள் தென்னிலங்கையில் இருந்தவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சி அல்ல என உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சியானது வடபுலத்தில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக பொருளாதாரத்தை பெருவாரியாக சுவீகரித்து கொண்ட ஒரு தரப்பினருக்கும் அல்லது அரசியல் தலைமையினருக்கும் சாதாரண மக்களிற்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி அல்லது பாரபட்சத்தை நீக்குவதற்காக உருவாக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.
வடக்கில் கிளர்ச்சிகள் ஒரு இனவதாக கிளர்ச்சியாக தோற்றம் பெற காரணம், அப்போது அரசியல் தலைமை வகித்த அமிர்தலிங்கத்தின் கருத்துக்களை ஒட்டியே அவை ஒரு இன ரீதியான பிரச்சனையாக உருவெடுத்ததாக அவர் கூறினார்.
இந்த விடயங்கள் தொடர்பாக பார்க்கின்ற போது அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் தங்களது சமூகத்திற்கு பொறுப்பு கூறுவதோடு அவர்களின் சுவீட்சத்திற்கு வழிசமைப்பதை விடுத்து பயங்கரவாத தலைவரான பிரபாகரனிடம் இதன் தலையெழுத்தை மாற்றுவதற்கான பொறுப்பை வழங்கியிருந்ததன் ஊடாக கடந்த 30 வருட காலமாக நாங்கள் பெருவாரியான இழப்புக்களை சந்திக்க நேர்ந்தது.
அமிர்தலிங்கத்தின் ஆசீர்வாதத்தோடு துப்பாக்கியை கையில் எடுத்த பிராபகரன் பேராபத்து மிக்க தலைமைத்துவத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் இருந்த பல அரசியல்வாதிகளினுடைய உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தது.
இதன் காரணமாக கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக பல அழிவுகளை நாம் சந்தித்திருந்தோம் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.jvpnews.com/srilanka/04/173222

No comments:

Post a Comment