Wednesday, May 30, 2018

பிரான்சில் ஈபிள் டவரை நொடிப் பொழுதில் தாக்கிய மின்னல்: காமெராவில் சிக்கிய அரிய காட்சி


பிரான்சில் உள்ள ஈபிள் டவரை மின்னல் தாக்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரான்சில் கடந்த சில நாட்களாகவே கடுமையான மழை பெய்து வருவதால், போக்குவரத்து முடங்கியுள்ளது.
அதிலும் குறிப்பாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கிருக்கும் வீதிகள் பார்ப்பதற்கு ஆறுகள் போன்று காணப்பட்டது. அதைத் தொடர்ந்து இரயில் நிலையங்களிலும் தண்ணீர் புகுந்தன.


இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை பாரிசில் புயல் எச்சரிக்கை விடப்பட்டது. அன்றைய தினத்தில் கடுமையான காற்றின் போது, திடீரென்று வானில் இருந்து வந்த மின்னல் புகழ் பெற்ற ஈபிள் டவரை நொடிப் பொழுதில் தாக்கியது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. புகழ் பெற்ற இந்த ஈபிள் டவரை பார்ப்பதற்கு வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/france/03/179945?ref=ls_d_france

No comments:

Post a Comment