Sunday, April 8, 2018

சிரியாவில் மிக மோசமான ரசாயன தாக்குதல்: 40 பேர் பலி


சிரியாவில் நேற்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடந்து வரும் போரில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் உள்ள டவுமா நகரில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

(Image: Anadolu)

இதில் குழந்தைகள் உட்பட 40 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி மனதை உருக்குகின்றன.
கடந்த சில நாட்களாக நடந்த தாக்குதலில் மட்டும் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் ரசாயன தாக்குதல் நடத்தப்படவில்லை என சிரியா அரசு தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

(Image: Anadolu)


(Image: Anadolu)

http://news.lankasri.com/middleeastcountries/03/175933?ref=ls_d_world

No comments:

Post a Comment