Sunday, March 18, 2018

தென்னிந்திய திரையுலகையே அசரவைத்த Germany தமிழச்சி!!


வீணை இசையின் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் இசையை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஊடாக பகிர்ந்த விடயம் நம் அனைவரும் அறிந்த் ஒன்று.
அதிலும் குறிப்பாக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளங்களில் இப்படியான இசைக்கருவி மீளாக்கத்தினை பகிர்ந்திருப்பது முதல்முறையாகும். இந்த நிலையில் தற்பொழுது தென்னிந்திய திரைதுறையினா் பலரின் அபிமானத்தை ஒலிவியா பெற்றிருக்கின்றாா்.
குறிப்பாக சூா்யா, அனிருத் ஆகியோா் ஒலிவியாவின் வீணை இசைக்கருவி மீளாக்கத்திற்கு தமது விருப்புக்களை வழங்கியுள்ளனா்.
சமீபத்தில் அனைவராலும் இரசிக்கப்பட்ட சரக்கு வண்டில என்ற பாடலை ஒலிவியா வீணையில் மீட்டி யூடீயூப் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அதனை இரசித்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது அபிமானிகளுடன் இதை பகிர்ந்துள்ளார். ஈழத்தமிழச்சி ஒலிவியாவின் சாதனைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த இந்த அந்தஸ்து ஊடகங்களிலும் இணையங்களிலும் அதிகம் பகிரப்பட்டது.
ஒலிவியாவின் பெற்றோா்கள் இலங்கையில் இருந்து ஜெர்மனி சென்று ஜெர்மனியின் குடியுரிமையை பெற்றவா்கள் ஆனாலும் தமது பண்பாட்டை மறவாது கடைபிடித்தனர்.
தமிழ் கலை கலாச்சாரங்களை பிள்ளைகள் கற்றுக்கொள்வதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டனா்.
இதன் முதல்படியே ஒலிவியா தனது நான்கரை வயதில் இருந்தே பரத நாட்டியம் கற்றார்.மேலும் தொடா்ந்தும் கா்நாடக இசையையும் கற்றாா்.அத்துடன் வீணை இசைமேல் கொண்ட பிரியமும் இவரை வீணை இசையை கற்க தூண்டியது.
அதிலும் விசேடமாக ஜொ்மனியில் முதன்முதலாக வீணையும், கா்நாடக வாய்ப்பாட்டு இசையையும் ஒன்றாக சோ்த்து அரங்கேற்றிய பெருமையும் ஒலிவியாவையே சேரும்.

1997, 1998 ஆண்டுகளில் ஜெர்மனி கலை பண்பாட்டுக் கழகத்தின் கானம்பாடி விருதுகளையும் தங்கப் பதக்கத்தினையும் பெற்றாா்.
2004 ஆம் ஆண்டு லண்டன் கீழ்த்திசை கலை அகாதெமியினால் வீணை மற்றும் சங்கீதத்திற்கான சங்கீத கலாஜோதி பட்டமும், 2007 ஆம் ஆண்டு நாட்டிய கலாஜோதி என்னும் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டில் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தமிழினால் இவருக்கு ஜேர்மனிய இன்னிசைக்குரல் விருது வழங்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டு ஜெர்மனி கலை பண்பாட்டு கழகத்தினால் ஆடற்கலையரசி பட்டம் ஒலிவியாவிற்கு வழங்கப்பட்டது.
அத்துடன் ஒலிவியா நடனத்துடன் பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.இதேவேளை ஒலிவியா ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் பல இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் செயற்படுகின்றாா்.


இசை, நடனம், என்றால் தென்னிந்திய கலைஞா்கள் தான் என்று எண்ணும் நிலையை ஒலிவியா தன்னுடைய கலைத்திறைமை மூலம் மாற்றிக்காட்டியுள்ளாா்.
இதேபோன்று புலம்பெயா்ந்து வாழும் எமது தாயக தமிழ் உறவுகளும் தமது சந்ததிக்கு எமது கலை கலாச்சாரங்கைளை கற்றுக்கொடுத்து சிறப்படையவேண்டும்.

http://www.jvpnews.com/srilanka/04/165553?ref=home-jvpnews

No comments:

Post a Comment