Sunday, March 18, 2018

பெண் துறவி பாபா வாங்கா ரஷ்யா குறித்து பகீர் தகவல்


ஐ.எஸ் அமைப்பின் எழுச்சி, Brexit உள்ளிட்ட பல நிகழ்வுகளை முன்னரே கணித்து சொன்ன பல்கேரியாவின் பெண் துறவி ரஷ்யா மற்றும் அதன் ஜனாதிபதி குறித்தும் அதிரடி கணிப்பை வெளியிட்டுள்ளார்.
பல்கேரியா நாட்டின் பெண் துறவி பாபா வாங்கா மீண்டும் ஒரு பரபரப்பு கணிப்பை வெளியிட்டுள்ளார். இந்த முறை ரஷ்ய ஜனாதிபதி மற்றும் எதிர்கால ரஷ்யா தொடர்பில் அந்த கணிப்பு வெளியாகியுள்ளது.
பாபா வாங்கா இதுவரை கணித்துள்ள பல்வேறு நிகழ்வுகள் 95 விழுக்காடும் நிறைவேறியுள்ளன. தற்போது பெண் துறவி பாபா வாங்கா ரஷ்யா தொடர்பில் கணித்துள்ளதாக கூறி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் செல்வாக்கு இனிவரும் காலங்களில் அதிரடியாக உயரும் எனவும், உலக நாடுகளை ரஷ்யா வழி நடத்திச் செல்லும் எனவும் பெண் துறவி பாபா வாங்கா கணித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவின் வளர்ச்சியை இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
மட்டுமின்றி உலகின் ஒரே ஒரு சூப்பர் பவர் என இனி வரும் காலங்களில் ரஷ்யா மட்டுமே இருக்கும் எனவும், அமெரிக்கா வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் அவர் கணித்துள்ளார்.
மேலும், மூன்றாம் உலக யுத்தம் நிகழ வாய்ப்பு உள்ளதாக கூறும் அவர் அது அணு ஆயுதம் பயன்படுத்திய போராக இருக்கும் எனவும் கணித்துள்ளார்.

1980 ஆம் ஆண்டு பாபா வாங்கா ரஷ்ய போர் கப்பல் தொடர்பில் ஒரு கணிப்பை வெளியிட்டார். கப்பல் ஒன்று நீரால் மூழ்கடிக்கப்பட்டு பல உயிர்கள் பலியாகும் என பாபா வாங்கா கணித்தார்.
2000 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் திகதி ரஷ்யாவின் புகழ்பெற்ற Kursk நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த அனைவரும் பலியானார்கள்.
இதே போன்று பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ள பாபா வாங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு தனது 85 ஆம் வயதில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/othercountries/03/174213?ref=home-section

No comments:

Post a Comment