Sunday, February 25, 2018

பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்



பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி(55) மாரடைப்பால் மரணமடைந்ததால் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது.
பிரபல நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்தவர் ஸ்ரீதேவி. கமல், ரஜினி ஆகியோர் நடித்திருந்த 16 வயதினிலே படம் இவரை திரையுலகில் ஒரு மைல் கல்லாம அமைந்தது.
இந்நிலையில் திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தபோது மாரடைப்பால் உயிர் பிரிந்தது. இதை அறிந்த திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது.
இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி, கடந்த 1967-ஆம் ஆண்டு கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
இறப்பதற்கு முன் ஸ்ரீதேவி எடுத்த கடைசி போட்டோ




பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 1967-ஆம் ஆண்டு கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் அதன் பின் நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென்று திரையுலகில் தனி முத்திரை பதித்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். ஸ்ரீதேவிக்கு வயது 54.

இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர்.ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி.
திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்தார் . அவருடைய மரணம் திரையுலகினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 300 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு கடைசி தமிழ் படம் புலி ஆகும். அவர் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் மாம் என்பது குறிப்பிடத்தக்கது.



இறப்பதற்கு முன் ஸ்ரீதேவி எடுத்த கடைசி போட்டோ - புகைப்படங்கள் உள்ளே
நடிகை ஸ்ரீதேவி சில மணி நேரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக வந்துள்ளது.
அவர் சமீபத்தில் நடந்த ஒரு பிரபல நடிகரின் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இறப்பதற்கு முன் கடைசியாக அவர் அந்த திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.




http://www.cineulagam.com/actresses/06/151602?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment