Monday, February 26, 2018

சினிமாவைக் கட்டிப்போட்ட மயிலின் தெரிந்திராத பக்கங்கள்!


இந்திய சினிமா இரசிகர்களை மட்டுமன்றி உலக சினிமா இரசிகர்களையும் அழகாலும் நடிப்புத் திறமையினாலும் வசீகரித்தவர்தான் தமிழ் நாட்டு மயிலு எனப்படும் நடிகை ஸ்ரீதேவி. இவர் இல்லாமல் ஒருகாலத்தின் சினிமா பதிவுகள் அமைந்துவிடாது என்பது இங்கே முக்கியமான ஒன்றாகும்.
தமிழ் சினிமாவில் ஆரம்பித்த ஸ்ரீதேவியின் திரைத்துறை வாழ்க்கை இந்திய சினிமாக்களையும் தாண்டி உலக சினிமா வரை விரிவு பெற்றிருந்தது. ஸ்ரீதேவியின் ஒவ்வொரு அசைவுமே பார்வையாளர்களை கட்டிப்போடுமளவுக்கு கலை நயம் மிக்கதாகவே இருந்துள்ளது. அவரது கண்கள் சிமிட்டும் அழகும், உதட்டுச் சிரிப்பின் அழகும் அவருக்கு பின் வந்த நடிகைகள் பலருக்கு முன்மாதிரியாக இருந்தன என்றே சொல்லமுடியும்.
இத்தகைய நடிகையின் பின்னணிகுறித்து இதுவரை அறிந்திடாத பல தகவல்களைக் கொண்டதாக இந்தப் பத்தி அமைகின்றது.
ஸ்ரீதேவி 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் திகதி அப்போதைய மதராஸ் மாகாணத்தின் (இந்தியாவில் மொழிவாரியான தனி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு முன்னர் தமிழ் நாட்டுக்கென இருந்த அதிகாரப் பிரிப்பு) சிவகாசியில் பிறந்தார். இவர் பிறந்தபோது ஸ்ரீ அம்மா யங்கேர் என்ற பெயரே சூட்டப்பட்டது. ஆனாலும் பப்பி என செல்லமாக அழைக்கப்பட்டார்.


உலக சினிமாவைக் கட்டிப்போட்ட தமிழ் நாட்டு மயிலின் தெரிந்திராத பக்கங்கள்!

ஸ்ரீதேவி தமிழ் நாட்டில் பிறந்தாலும் தமிழ் நாடு இவரது தந்தையின் ஊர் மட்டுமே. தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில்தான் ஸ்ரீதேவி பிறந்தார். அவரது தாயார் திருப்பதி, ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவராவார். எனவே ஸ்ரீதேவி தமிழ்-தெலுங்கு கலப்பில் இரண்டு மொழிகளையும் பேசும் குழந்தையாக வளர்ந்தார். அவருடன் ஸ்ரீலதா என்ற சகோதரியும் சதீஷ் என்ற சகோதரனும் கூடப் பிறந்தவர்களாவர். ஸ்ரீதேவியின் தந்தை 1991 ஆம் ஆண்டில் இறந்தார், அதேபோல் 1997 ஆம் ஆண்டில் அவரது அம்மா இறந்தார்.

1967 ஆம் ஆண்டில் கந்தன் கருணை எனும் தமிழ் திரைப்படத்தில் சிறுவயது கலைஞராக நடித்து தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1977 ஆம் ஆண்டில் தெலுங்கு படமான 'பங்கார்கா' படத்தில் குழந்தை நடிகையாகவும், 1969 ஆம் ஆண்டில் மலையாளம் திரைப்படமான 'குமார சம்ஹவன்' படத்திலும் நடித்தார்.

ஸ்ரீதேவி ஹிந்தி திரைப்படத்துறையில் 1975 ஆம் ஆண்டில் முதன்முதலாக கால்பதித்தார். ஜூலி என்ற திரைப்படத்தில் கதாநாயகியின் இளைய சகோதரியாக நடித்தார். பின்னர் 1979 ல் இருந்து ஹிந்தியில் கதாநாயகி பாத்திரங்களில் நடித்தார். ஹிந்தி திரைப்படத்தில் 63 திரைப்படங்களில் அவர் நடித்தார், 62 தெலுங்கு படங்களிலும் 58 தமிழ் படங்களிலும் 21 ல் மாலையாளப் படங்களிலும் கதா நாயகியாக நடித்தார்.

ஸ்ரீதேவி 1977-1983 காலப்பகுதியில் தமிழ் திரைப்படங்களில் கல்மல் ஹாசனுடனும், பின்னர் 1983-1988 ஆம் ஆண்டுகளில் ஹிந்தி திரைப்படங்களில் ஜீடெந்திராவுடனும் இணைந்து அதிக பிரபலமிக்க படங்களில் நடித்தார். 80 களின் பிற்பகுதியில் இருந்து 1996 வரை அனில் கபூருடன் நடித்த திரைப்படங்கள் அவரை புகளின் உச்சிக்கு இட்டுச் சென்றன.

தொலைக்காட்சி தொடரான ​​'மாலினி ஐயர்' நிகழ்ச்சியிலும் அவர் தோன்றியதோடு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'கபும்' என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்றார். பல அச்சு மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் ஸ்ரீதேவி தோன்றினார். அவர் Asian Academy of Film & Television இயக்குநர்கள் குழுவிலும் அங்கத்தவராக இருந்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி, தனது சக நடிகர் அனில் கபூரின் மூத்த சகோதரரான, இயக்குனர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவி-போனி கபூர் இணையருக்கு இப்போது ஜான்வி மற்றும் குஷி எனும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

2012 இல் ’இங்கிலிஸ் விங்கிலிஸ்’ என்ற திரைப்படத்துடன் அவர் மீண்டும் திரைத்துறைக்கு வந்தார்.


1980 களில், ஜெயபிரதாவும் ஸ்ரீதேவியும் திரைத்துறை நாயகிகள் வரிசையில் கடுமையான போட்டியாளர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமாத்துறையில் போட்டியாளர்காக இருந்தது மட்டுமன்றி ஹிந்தி சினிமாவிலும் ஏராளமான நடிகைகளுக்கான போட்டியாளர்களாக கருதப்பட்டனர்.

ஹோலிவூட்டின் புகழ்பெற்ற இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ’ஜுராசிக் பார்க்’ படத்தில் நடிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தினை ஸ்ரீதேவிக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால் ஸ்ரீதேவி அதனை மறுத்துவிட்டார். காரணம், தான் அந்தப் படத்தில் ஒரு நடிகராக இல்லை என்பதால் அந்தச் சந்தர்ப்பத்தை மறுத்தார்.

ஸ்ரீதேவி தனது தொழில் வாழ்க்கையின் உயரத்தில் இருந்தபோது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகளில் இருந்த இந்திய வம்சாவளியைக்கொண்ட மிகப்பெரிய பணக்காரர்களிடமிருந்து திருமணக் கோரிக்கைகளைப் பெற்றிருந்தார். ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் அஷோக் அமிர்தராஜ்ஜை திருமணம் செய்யப்போவதாக வதந்தியும் அப்போது உலாவியிருந்தது.

ஸ்ரீதேவியின் குடும்பத்தில் ஸ்ரீதேவி மட்டுமே வருமானத்தைப் பெறுபவராக இருந்துள்ளார். அவரது தாயார் இன்னொரு கல்யாணம் செய்தபோதே ஸ்ரீதேவிக்கு ஒரு சகோதரன் பிறந்தார். தனது வருமானத்தைக்கொண்டே ஸ்ரீதேவி தனது குடும்பத்தாருக்கு ஆதரவாக இருந்தார்.

ஹிந்தியில் ஜீடேன்ராவுடன் இணைந்து 16 படங்களில் காதல் ஜோடியாக ஜோடியாக நடித்தார். அவற்றுள் 1983-88 வரை வந்த பதினொரு படங்கள் மிகப்பெரிய வெற்றியினைக் கொடுத்தன.

ஸ்ரீதேவி 1985-1992 முதல் அதிக சம்பளம் பெற்ற ஹிந்தி நடிகைகளுள் ஒருவராக விளங்கியதோடு 1993-1996 முதல் இரண்டாவது அதிக சம்பளம் பெற்ற ஹிந்தி நடிகையாகத் திகழ்ந்தார்.

அவர் ஒரு குழந்தை நடிகையாக இருந்தபோது உதவியாளர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவை சந்தித்ததை ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். அதாவது தெருவை கடந்து செல்லும்போது ஒரு வாகனத்தால் இடிபடுவதாக ஒரு காட்சி. ஆனால் அது அவ்வாறே நடந்துள்ளது. ​​ஸ்ரீதேவி சிறிய காயங்களைச் சந்திக்க நேர்ந்ததால் ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஸ்ரீதேவிக்கு ஹிந்தி பேசத்தெரியாது. ஆரம்பத்தில் அவரது படங்களுக்கு னடிகை Naaz மற்றும் ரேகா ஆகியோர் குரல்பதிவு கொடுத்தனர். ஸ்ரீதேவி தனது இரண்டு படங்களுக்கு இயக்குனரின் முதல் தேர்வாக இருக்கவில்லை. ஜெயபிரதா கதாநாயகியாக நடித்த நாகினா (1986) திரைப்படத்திலும் ரேகா நடித்த சாந்தினி (1989) படத்திலும் ஸ்ரீதேவிக்கு இரண்டாம் இடமே கிடைத்தது.
மிஸ்டர் இந்தியா படத்திற்காக ஸ்ரீதேவியை நடிக்கவைப்பதற்காக போனி கபூர் ஸ்ரீதேவியின் அம்மாவை அணுகினார். அதற்கு ஸ்ரீதேவியின் அம்மா பத்து லட்சம் ரூபாவை சம்பளமாக கோரினார். ஆனால் போலி கபூர் அதற்கும் மேலாக பதினொரு லட்சம் ரூபா தருவதாக கூறினார். பின்னர் அவர் படப்பிடிப்புக் காலத்தில் நடிக்கைக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என அனுமதிபெற்றார்.

நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது முதல் பேசும் பாத்திரத்தில் ஸ்ரீதேவியுடன் பக்வான் தாதா (1986) என்ற படத்தில் நடித்தார், இதில் குழந்தைக் கலைஞராக அவர் ஒரு சிறிய பாத்திரம் வகித்தார். லண்டனில் யாஷ் சோப்ராவின் லம்ஹே (1991) படப்பிடிப்பின் போது தந்தை தந்தை இழந்தார். இறுதிச் சடங்கிற்காக லண்டனிலிருந்து தாயகம் திரும்பி வீட்டிற்கு சென்றார்.
மிகவும் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவி பொது மேடைகளில் அடிக்கடி சொல்லும் வசனமாகும். தான் தென்னிந்தியாவில் நடித்த காலங்கள் மற்றும் கதாபாத்திரங்கள், மிகவும் சவாலானவை என்பதோடு அற்புதமானவை என ஸ்ரீதேவி கூறியிருந்தார்.






ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகை ஆகியோர் தாம் செயல்பட கற்றுக்கொள்வதற்கு முன்னர் தமது ஈகோவை நசுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீதேவி அடிக்கடி கூறுவார். அதாவது நன்றாகச் செயல்படத் தெரியாதவர்கள்தான் ஈகோவைக் கொண்டிருப்பதாக அவர் கருத்து.

ஸ்ரீதேவி ஜெயபிரதா கடும் போட்டியில் இருந்த காலத்தில் அவர்களுக்குள் பனிப்போர் நிலவியது. இதனால் ஊடகங்களும் அந்த பனிப்போரை வைத்து தாறுமாறாக எழுதத்தொடங்கின. இதுகுறித்து ஒருமுறை குறிப்பிட்ட ஸ்ரீதேவி, “எமது பனிப்போரில் ஊடகங்கள் குளிர்காய்வதை நானும் ஜெயபிரதாவும் நன்றாக உணர்ந்துகொண்டு ஒரு முடிவுக்கு வந்தோம். நீங்கள் தோஃபா (1984) அல்லது மக்ஸாத் (1984) ஆகிய படங்களைப் பார்த்தால் இதனை உணர்ந்திருப்பீர்கள். அதில் எமது விரோதப் போக்கு இல்ல. இப்பொழுது நாங்கள் இருவரும் நல்ல நண்பிகள். கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். கடந்த காலங்கள் எல்லாம் அர்த்தமற்ற சர்ச்சைகள் என்றுதான் சொல்லமுடியும்” என்றார்.

இவ்வாறாக திறமையிலும் குணத்திலும் உச்சத்தைத் தொட்டிருந்த ஒரு அற்புதமான நடிகையாக ஸ்ரீதேவி விளங்குகின்றார் என்றால் அது மிகையாகாது. அவரது இழப்பு என்பது தமிழ் மட்டுமன்றி உலக சினிமா வரலாற்றில் ஒரு பேரிழப்பாகும்.

”தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ?”
என்ற பாரதியின் காதல் கீதம் ஸ்ரீதேவியை அற்புதமான நடிகையாக நேசித்த எண்பதுகளின்-எண்பதுகளுக்குப் பிந்திய வாலிபர்களது உள்ளத்தில் என்றும் ஒலித்தபடிதான் இருக்கும்!





http://www.viduppu.com/celebs/06/151619

ஸ்ரீதேவியை திருமணம் செய்ய போனி கபூர் போட்ட திட்டம்...


நடிகை ஸ்ரீதேவியை முதலில் பார்த்த தருணத்தில் அவரது அழகில் மெய்மறந்ததால், அவரை திட்டம் போட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளாராம் அவரது கணவர் போனி கபூர்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையை தன்னுடைய நடிப்புத் திறமையாலும், அழகாலும் கவர்ந்திழுத்தவர் நடிகை ஸ்ரீதேவி. சிவகாசியில் பிறந்த இவர், தன்னுடைய 4வது வயதிலேயே நடிப்பில் இறங்கியுள்ளார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளாம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது, பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா டுடே சார்பில் நடந்த பெண்கள் உச்சி மாநாட்டில் நடிகை ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் கலந்து கொண்டார். அப்போது, போனி கபூரிடம் நீங்கள் எப்படி ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 1970ல் ஸ்ரீதேவி நடித்த ஒரு தமிழ் படத்தை திரையில் பார்த்தேன். அப்போதே, அவர் மீது எனக்கு ஒரு இனம் புரியாத தாக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு அவரை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். அப்போது, ரிஷி கபூர் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தோம்.
அந்தப் படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து அவரை சந்திக்க சென்னை சென்றேன். ஆனால், அவர் சிங்கப்பூரில் இருந்தார். அதன் பிறகு ஷேகர் இயக்கத்தில் மிஸ்டர் இந்தியா படத்தில் ஸ்ரீதேவி நடிக்க ஒப்பந்தம் ஆனார். அப்போது, அவர் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் ரூ.8 லட்சம்.
என்னுடைய படத்தில் நடிக்க ஸ்ரீதேவியின் அம்மா ரூ.10 லட்சம் கேட்டார். நான், அவர் மீது கொண்ட காதலால், ரூ.11 லட்சம் கொடுத்து அவரது அம்மாவின் மனதில் இடம் பிடித்தேன். படப்பிடிப்பின் போது அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டு அவரையும் என் பக்கம் இழுக்க ஆரம்பித்தேன்.
அந்த நேரத்தில் கபூரின் மனைவி மோனாவிடம் சொல்லிவிட்டு ஸ்ரீதேவிக்கு எங்கெல்லாம் படப்பிடிப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று, அவரை நெருங்கினேன். எப்படி உண்மையாக இருக்கிறேன் என்று உணர்ந்த ஸ்ரீதேவிக்கு இப்போது நான் கணவராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


http://www.manithan.com/cinema/04/163229?ref=right-popular-cineulagam


ஸ்ரீதேவியின் உடல் இன்றும் இந்தியா வருவதற்கு வாய்ப்பில்லை? வெளியான காரணங்கள்

நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்றும் இந்தியாவிற்கு வர வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருமண நிகழ்வுக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதன் பின் அவர் உடல் நோய் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை, தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அவரது உடலில் ஆல்கஹால் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. எனவே இதை சாதாரண மரணமாக பார்க்க முடியாது.
சந்தேகத்திற்கிடமான இறப்பு என்ற பிரிவில்தான் துபாயில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீதேவியின் இந்த மரண வழக்கு துபாய் public prosecution துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


அவர்கள் அனைத்து விசாரணைகளையும் நடத்தி முடித்து ஒப்புதல் வழங்கிய பின்னரே ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முடியும், இதன் காரணமாகவே தாமதம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் முழு அளவிலான உடல்கூறு சோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. மேலோட்டமான முதல்கட்ட அறிக்கைதான் வெளியாகியுள்ளது.
எனவே, இன்றைக்குள் ஸ்ரீதேவி உடலை இந்தியா எடுத்துச் செல்ல துபாய் அரசு அனுமதி வழங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் நாளைதான் ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்ல public prosecution துறை அனுமதி கொடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment