Friday, November 3, 2017

கனடா செல்ல விருப்பமா?


2020 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் குடியேற்றவாசிகளுக்கு குடியுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹுசெய்ன் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதாரத்தில் கனடாவின் வளர்ச்சிமட்டத்தை வலுப்படுத்தவே இதன்மூலம் எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் குடியேற்றவாசிகளை அதிகளவில் கனடாவுக்குள் உள்வாங்குவதன் மூலம் தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும் எனவும், அதனூடாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி எழுச்சி பெறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக 2018 ஆம் ஆண்டிலிருந்தே நிரந்தர வீட்டுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையை மூன்று இலட்சத்துக்கும் அதிகமாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசின் இவ்வாறான தீர்மானத்தால் கனடாவிற்கு குடியேற்றவாசிகளால் பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படும் வாய்புள்ளதாக சமூக ஆர்வளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.canadamirror.com/canada/04/148021

No comments:

Post a Comment