Tuesday, October 31, 2017

உலகில் எந்த சக்தியாலும் எங்களை அழிக்க முடியாது: குய் டியான்காய்


உலகில் எந்த சக்தியாலும் தங்களை கட்டுப்படுத்த முடியாது என்று அமெரிக்காவின் சீன தூதர் குய் டியான்காய் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது, அமெரிக்கா பயன்படுத்தும் ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா உளவு விமானங்களை இந்தியாவுக்கு வழங்கும்படி அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்பிடம் கேட்டுக் கொண்டார்.

இதனால் ஆயுதங்கள் இல்லாத 22 கார்டியன் ரக விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க அரசு சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கான சீன தூதர் குய் டியான்காய், இந்தியாவை மையமாக வைத்து அமெரிக்கா தனது ஆசிய வெளியுறவுக் கொள்கையை உருவாக்கி உள்ளது. அத்துடன் இந்தியாவுக்கு மிகவும் நவீனமான போர் ஆயுதங்களை வழங்கவும் அது முடிவு செய்துள்ளது.

ஆயுதங்களை வைத்து சீனாவை ஒன்றும் செய்துவிட முடியாது, கட்டுப்படுத்தவும் முடியாது. சீனா வரவிருக்கும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் இந்தியாவுக்கு ஆயுதம் வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் என்றும் இந்தியா உடனான உறவு கடந்த சில வருடங்களாக நல்ல முறையில் வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் அதிநவீன ஆயுதங்களை வைத்து எங்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை இந்தியாவுக்கு சீனா மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
http://news.lankasri.com/othercountries/03/135775

No comments:

Post a Comment