ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதால், சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவில் குடியேறியவர்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் பிரித்தானியாவின் வெளியேற்றத்தினால் வர்த்தக சமூகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியேற்ற அமலாக்கல் அலுவலகத்தின் முன்னாள் தலைவர் ஒருவரின் கருத்திற்கமைய, ஒரு மில்லியனுக்கும் அதிமான மக்கள் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வாழ்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Brexit விவகாரம் ஐரோப்பிய ஒன்றிய மக்களை பாதிக்கும் என்ற போதிலும், பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தங்களுக்கு நன்மை ஏற்படும் என நம்புகின்றனர்.
இது தொடர்பில் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு குடியேறிய தமிழரான 31 வயதுடைய செல்வராசா சபேசன் என்பவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
Brexit நடந்தால் பிரித்தானியாவை விட்டு ஐரோப்பிய ஒன்றிய மக்கள் வெளியேறுவார்கள். இதன் ஊடாக நாம் அரசாங்கத்திடம் ஒரு வாய்ப்பை கோர முடியும். பிரித்தானிய அரசாங்கத்தை பொறுத்தவரையில் மக்கள் குறைவான ஊதியத்தில் வேலைகளை செய்ய வேண்டும், எனவே நம்மை சட்டப்பூர்வமாக மாறுவதற்கான வாய்ப்பு நமக்கு வழங்கப்படும் என நாம் நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, செல்வராசா மற்றும் அவருடைய நண்பரான 33 பாலசிங்கம் குமரேசன் ஆகியோர் உணவு தயாரிக்கும் இடத்தில் சட்டவிரோதமாக வேலை செய்து வருகின்றனர்.
அவர்கள் வேலை செய்யும் கடை உரிமையாளர் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை வழங்கியதனால் அவருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டதோடு சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ளார்.
நாங்கள் முழு நாள் வேலை செய்தாலும் 15 மற்றும் 20 ஸ்டெர்லிங் பவுண்ட் மாத்திரமே சம்பளமாக கிடைக்கும் என பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு இரண்டு நேர உணவுகளை பெற்றுக் கொள்வோம். எனினும் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளதென அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல் இலங்கையில் இருந்து சென்ற தமிழர்கள் குழுவொன்று கடை ஒன்றுக்குள் வசித்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக இவர்கள் பிரித்தானியாவுக்கு குடியேறியுள்ளமையினால் மிகவும் கடினமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றது தெரியவந்துள்ளது. எனவே இவர்கள் Brexit வரை காத்திருப்பதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment