நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியான மெர்சல் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வெற்றிகரமாக ஓடிக்ககொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இந்திய அரசியலில் இந்த திரைப்படம் பேசும் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கு எதிர்ப்பு வெளிவந்துள்ளது.
மருந்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளனர். ஆனால் தாய்மார்கள் தாலியை அறுக்கும் சாராயத்துக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாதாம் என்றும், 7 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சிங்கப்பூரில் மக்களுக்கு இலவச மருத்துவம் தறாங்க.
ஆனால் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் தர முடியவில்லை என மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஆளும் கட்சியான பா.ஜ.க கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டர் பதிவொன்றை விடுத்துள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார்,
“திரு.மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஆழ்ந்த வெளிப்பாடு. மெர்சல் பட விவகாரத்தில் தலையிட்டு தமிழின் தன்மானத்தை, மதிப்பு-இறக்கச் செய்யாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.
திரு மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஆழ்ந்த வெளிப்பாடு. 1/2— Office of RG (@OfficeOfRG) October 21, 2017
— Office of RG (@OfficeOfRG) October 21, 2017
“உங்கள் காங்கிரஸ் ஆட்சியின்துணையோடு இலங்கையில் எம்த மிழர்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டபோது எங்கே போனீர்கள் ராகுல்....” என அவர் கூறியுள்ளார்.
உங்கள் காங்கிரஸ் ஆட்சியின்துணையோடு இலங்கையில்எம்தமிழர்கள்கொத்துகொத்தாக கொல்லப்பட்டபோது எங்கே போனீர்கள் ராகுல்.... https://t.co/Py9s8yUpP4— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) October 21, 2017
With the help of your congress government lakhs and lakhs of Tamilians were killed in SrilLanka where were u Rahul? https://t.co/ThWFr6Iz4F— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) October 21, 2017
http://www.tamilwin.com/special/01/162603
No comments:
Post a Comment