Sunday, October 29, 2017

பணி நேரத்திற்கு முன்னரே சென்று அதிக நேரம் பணிபுரிந்தவரை வேலையை விட்டு நீக்கிய நிர்வாகம்!!



ஸ்பெயின் நாட்டில் செயல்பட்டுவரும் ஜேர்மானிய சூப்பர்மார்கெட் ஒன்று, ஊழியர் ஒருவர் அதிக நேரம் பணிபுரிவதாக கூறி அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம் அடைந்த ஊழியர் தமது முன்னாள் தலைமை நிர்வாகி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜீன் என்ற குறித்த ஊழியர் தமது பணி நேரத்திற்கும் ஒரு மணி நேரம் முன்னரே வந்து பொருட்களின் அன்றாட விலைகளை சரி பார்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஆனால், குறித்த நிறுவனத்தின் கொள்கைப்படி ஊதியமில்லாமல் அதிக நேரம் பணியில் இருத்தல் கூடாது என்ற சட்டத்தை மீறியுள்ளதாக அந்த ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளது.

தமது பணி நேரத்திற்கு முன்னரே வருவது மட்டுமின்றி பணி நேரம் முடிந்த பின்னரும் அவர் பணியில் தொடர்வதாகவும் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஊழியர்கள் பணி புரியும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நிர்வாகம் ஊதியம் வழங்குவதாகவும், ஊழியர்களின் ஒவ்வொரு பணி நிமிடமும் கணக்காக்கப்படுவதாகவும் குறித்த பல்பொருள் அங்காடி சுட்டிக்காட்டியுள்ளது.

12 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்து வந்தாலும் குறித்த நிறுவனம் இதுவரை ஒருபோதும் பணி நேரத்திற்கு முன்னரே வர ஊழியர்களை பணித்ததில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆனால், ஜீனின் அர்ப்பணிப்பால் நிர்வாகம் கண்டிப்பாக பலன் பெற்றுள்ளதாக கூறிய அவரது வழக்கறிஞர், நிர்வாகத்தின் நெருக்கடியை சமாளிக்கவே தமது கட்சிக்காரர் அதிக நேரத்தை நிறுவனத்தில் செலவிட முடிவு செய்தமைக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, குறித்த ஊழியரின் தலைமை நிர்வாகிக்கு இது தெரியும் எனவும், நிர்வாகத்தின் நெருக்கடிகளுக்கு ஈடுகொடுக்க அர்ப்பணிப்பும் அதிக பணி நேரமும் தேவைப்படுகிறது என்றார்.
http://news.lankasri.com/company/03/135567

No comments:

Post a Comment