Sunday, October 29, 2017

இப்படி ஒரு தமிழ்க்கொலையை (திருமண பத்திரிக்கையை) நீங்கள் பார்த்தது உண்டா?


திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கூடியது. காரணம் இதில் நிகழும் பல சுவாரசியமான நிகழ்வுகள்!

அந்த வகையில் ஒரு திருமணத்திற்காக அச்சிடப்பட்ட வினோதமான பத்திரிக்கையின் தமிழ்க்கொலை சமூக வலைத்தளத்தில் பரவி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அப்படி என்ன வினோதம் என்று பார்த்தால்,

"என்னப்பா விஷேசம்"

என்ற கேள்வியில் ஆரம்பிக்கும் இந்த பத்திரிக்கையில் நடக்கவிருக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் வேடிக்கையான கேள்விகளும் பதில்களும் இடம் பெற்றுருக்கிறதுதான்.

அடுத்து மணமகன் மற்றும் மணமகள் விவரத்திற்கு

 "யாருப்பா மாப்பிள்ளை, யாருப்பா பொண்ணு"

என்றும்,

திருமண நாளை குறிப்பிடும் முன்பு,

" Monday-ல வெச்சிருக்கீங்க கண்டிப்பா வரணும்மா?? "

என்ற கேள்விக்கு பதிலாக

" நீங்க monday லீவ் போட்டுட்டு பஸ் புடிச்சி, பிளைட் புடிச்சி வரணும்னு சொல்லமாட்ட ஆனா வந்தா happy ஆ இருக்கும்"
என்றும் குறிப்பிடப்பட்டிருக்கு.


இத விட விருந்து உபசரிப்பிற்கு இடம் பெற்றிருக்கும் வார்த்தைதான் வேடிக்கையின் உச்சம்(தமிழை கொள்வது இப்படியான தமிழருக்கு வேடிக்கை,இதுதான் இன்றும் வாடிக்கை)..

என்னய்யா சாப்பாடுனு குறிப்பிட்டு,

நடக்குறது, தாவுறது, ஓடுறது போடுறது

னு சொல்லி சந்தோசப்பட வெச்சிட்டு அதற்கு கீழ

" இதெல்லாம் போடணும்னு எனக்கு ஆசைதான் but unfortunately veg மட்டும்தான்"

அப்டினு கேலியா சொல்லிருக்காங்க.

மேலும்

"Gift ஏதும் வாங்கிட்டு வரணும்ங்களா என்ற கேள்விக்கு கீழயே 500 ரூவா கொடுத்தாலும் சரி 1000 ரூவா கொடுத்தாலும் சரி வாங்கிகோடாணு அறிவு சொல்லுது, நீங்க வந்தா மட்டும் போதும்னு மனசு சொல்லுது, ஆனா என் மனசு படி நீங்க வந்தா மட்டும் போதும்"

 அப்டினு மனச டச் பண்ணிருக்காங்க.

கடைசியா

"எல்லாம் சரி சரக்கு உண்டா?? என்ற கேள்விக்கு குடி குடியை கெடுக்கும் கல்யாண வீட்டில் பஞ்சாயத்தை உண்டாக்கும்(தமிழ்க்கொலைக்கு மத்தியிலும் சிறு தத்துவம்,இன்றைய உலகத்தமிழனுக்கு நிச்சயம் மண்டையில் உறைக்கவேண்டியத்தை சொல்லியுள்ளார்கள்,வாழ்த்துகள்!)"

 என்று அன்போடு முடிச்சிருக்காங்க..


http://www.manithan.com/world/04/147206

No comments:

Post a Comment