வரலாற்று சிறப்புமிக்க முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் புராதன காலத்து சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னேஸ்வர ஆலயத்திற்கு அருகிலுள்ள ஏரியில் புணரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களினால் இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது.
மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்பட்ட அந்த சிலையை தோண்டி எடுக்கும் போது அது உடைந்துள்ளது.
இருந்தபோதும் அந்த சிலையின் வடிவமும் தன்மையும் பார்க்கும்போது அது புதிதாக செதுக்கப்பட்ட சிலைபோல் காணப்படுவதாக பலர் தெரிவிக்கின்றனர்.
இந்த ஏரியில் அகழ்வாராச்சி செய்யும் பட்சத்தில் மேலும் பல உண்மைகள்.. புராதண சான்று கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னேஸ்வரத்தில் தீடீரென தோன்றிய சிலையால் அப் பகுதி மக்கள் வியப்பில் உள்ளதாக கூறப்படுகிறது...
http://www.canadamirror.com/srilanka/04/146924
No comments:
Post a Comment