பழைய தேசிய அடையாள அட்டை தொடர்ந்தும் செல்படியாகும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஜீ.வீ.குணதிலக தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்துடனான புதிய தேசிய அடையாள அட்டை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டிலுள்ள அனைவரும் இந்த அடையாள அட்டையை தற்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தகவல் இதனூடாக வெளிப்படவில்லை.
தற்போது பயன்படுத்தும் அடையாள அட்டை தொடர்ந்தும் செல்லுபடியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மோசடியான அடையாள அட்டை பயன்பாடு அதிகரித்தமை மற்றும் ஒரே இலக்கத்தில் சில அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நவீன அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டையில் ஆள் ஒருவரின் தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எந்த ஒரு நாட்டிலும் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த இதனைப் பயன்படுத்த முடியும்.
இந்தப் புதிய அடையாள அட்டைக்காக எந்தவொரு மேலதிக கட்டணமும் அறிவிடப்பட மாட்டாது.
இதனை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்வது அவசியமாகும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஜீ.வீ.குணதிலக தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/04/147212
No comments:
Post a Comment