Tuesday, July 7, 2015

அடிபட்டு விழுந்த நிலையில் கூட உதவி செய்வதுபோல நடித்து மோதிரத்தை ஆட்டையைப் போட்ட !

ஒட்டுசுட்டான் கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி நேற்று உயிரிழந்தார். அவர் காயப்பட்டு மயங்கிய நிலையில் அவருக்கு உதவி செய்வது போல நடித்து அவர் அணிந்திருந்த பெறுமதியான மோதிரத்தை யாரோ திருடியுள்ளனர் என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம் பெற்ற இந்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கிஷ்ணகுமார் கஜேந்திரன் (வயது - 31) என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவியும் 5 வயதுப் பெண் குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிச் சென்று மரத்துடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தையடுத்து அவர் மயங்கிவிட்டார். மனைவியும் மகளும் படுகாயமடைந்திருந்தனர். அந்த இடத்தில் அவர்களுக்கு உதவியவர்களில் ஒருவரே குடும்பஸ்தர் மயங்கிக் கிடந்த நிலையில் அவர் அணிந்திருந்த பெறுமதிமிக்க மோதிரத்தைத் திருடிச் சென்றுள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். புதுக்குடியிருப்புப் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment