Monday, June 1, 2015

ராணுவ வீரர்களின் பிறப்புறுப்பை துண்டித்து பாகிஸ்தான் வெறிச்செயல்: அம்பலமான அதிர்ச்சி தகவல்

இந்திய ராணுவ வீரர்களின் பிறப்புறுப்பை துண்டித்து, கண்களை குத்தி பாகிஸ்தான் வெறிச்செயல் நடத்தியது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் இடையே மூன்று மாதங்கள் நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்றது.
அந்த போரின் போது, கார்கில் பகுதியின் கக்சார் லாங்பா என்ற இடத்தில் ஜாட் படைப் பிரிவை சேர்ந்த கேப்டன் சவுரப் காலியா, சிப்பாய்கள் அர்ஜுன்ராம் பாஸ்வானா, முலா ராம் பிடியாசர், நரேஷ் சிங், பன்வர் லால் பகாரியா மற்றும் பிகார் ராம் முத் ஆகியோரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் சென்று கொலை செய்தது.
பின்னர் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களின் உடல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது, அவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
22 நாட்கள் அவர்களை தங்கள் பிடியில் வைத்திருந்த பாகிஸ்தான், வீரர்களின் பிறப்பு உறுப்பை துண்டித்தும், சொல்ல முடியாத துன்புறுத்தலையும் அரங்கேற்றியுள்ளது.
ராணுவ வீரர்களின் பற்களை உடைத்தும், உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்தும், தலை முடியினை பிய்த்தும், தலை மற்றும் உடல் பகுதிகளில் எழும்புகளை நொறுக்கியும் சித்தரவதை செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் வீரர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் இவ்வளவு கொடுமை படுத்தியது தொடர்பாக ஆதாரங்கள் இருத்தும், பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க இந்திய அரசு தயங்குகிறது.
இவ்விவகாரத்தில் ராணுவ வீரர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல மத்திய அரசு மறுத்துள்ளதோடு, பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் செல்வது சாத்தியமானது கிடையாது என்று மோடி அரசு தெரிவித்துள்ளது.
கேப்டன் காலியாவின் உறவினர்கள் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசின் இப்பதில் வெளியாகி உள்ளது.
ஆனால் பாகிஸ்தான் அரசோ, கேப்டன் காலியா மற்றும் அவருடைய சிப்பாய்கள் கடுமையான வானிலை காரணமாக உயிரிழந்து விட்டனர் என்றும் அவர்களை பள்ளத்தில் கண்டோம் எனவும் பொய் தகவலை கூறிவருகிறது.
காங்கிரஸ் தலைவர் பி.எல். புனிதா பேசுகையில், கேப்டன் காலியா விவகாரத்தை சர்வதேச கோர்ட்டிற்கு எடுத்துச்செல்ல இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லக்கூடாது என்று முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது நாட்டிற்காக உயிரிழந்த தியாகிகளை அவமதிப்பு செய்வது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment