Friday, April 3, 2015

அரசியல் செய்ய விகாரைகளுக்கு செல்லவில்லை: மஹிந்த ஆவேசம்

இந்தியாவில் இலங்கையர் வெட்டிக் கொலை!
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 04:42.25 AM GMT ]
தமிழகத்தில் இலங்கைப் பிரஜை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பழனிக்கு அருகிலுள்ள புலியம்பட்டி அகதி முகாமில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வர்ணம் பூசும் கூலித்தொழிலாளியான 25 வயதான ஜி.கமலநாதன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கமலநாதனின் மனைவி நாகராணி பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பழனி பிரதேசத்தை சேர்ந்த தண்டபானி என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரின் மனைவியான நாகராணிக்கும் தண்டபானிக்கும் இடையில் தொடர்பிருந்ததாகவும் அதனை நிறுத்திக்கொள்ளுமாறு கமலநாதன் எச்சரித்தனால் தண்டபானி அவரை கொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்தள்ளது.

அரசியல் செய்ய விகாரைகளுக்கு செல்லவில்லை: மஹிந்த ஆவேசம்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 04:09.09 AM GMT ]
அரசியல் செய்யும் நோக்கில் நான் விகாரைகளுக்கு செல்லவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனது ஆட்சி காலத்தில் பதவி வகித்த அதிகாரிகளிடத்தில் பொலிஸார் நிபந்தனையற்ற வகையில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நான் விகாரைக்கு செல்வது எனது அரசியலை தொடர்வதற்கல்ல, பூஜை வழிப்பாடுகளில் ஈடுபடுவதற்கே என மஹிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq1G.html

No comments:

Post a Comment