பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுவருவதாக சிறுவர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான அசம்பவிதங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கைவிடுத்துள்ளதாக சிறுவர் அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அறிக்கையில்லாமல் பாடசாலை சேவைகளில் ஈடுப்படும் வேன்களுக்கு சாரதிகளை இணைத்துக்கொள்வதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்படும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சாரதிகளை இணைத்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை ஒரு பெண் பராமரிப்பாளரின் கீழ் வேன்களில் அழைத்துச்செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment