மருமகனை பொலிசில் பிடித்துக் கொடுத்தார் மாமியார் - மகள் உயிரிழப்பு மருமகன் தற்கொலை முயற்சி யாழில் சம்பவம்
[ Apr 03, 2015 05:46:19 AM | வாசித்தோர் : 6370 ]
தனது மகளின் நகைகளை அடகு வைத்த காரணத்தால் கோபமுற்ற மாமியார் மருமகனை பொலிசில் பிடித்துக் கொடுத்தார். இதன் காரணமாக மகள் தூக்கில் தொங்கினார். இதனைக் கேள்வியுற்ற மருமகன் பொலிசாரின் பிடியில் இருந்த போதும் பொலிஸ் நிலையத்தில் வைத்து போத்தலை உடைத்து தன்னைத் தானே வயிற்றில் குத்தி படுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்க முன்னரே இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பெண் இளவாலை பிரான்பற்றைச் சேர்ந்தவர் என்றும் மாப்பிளை வவுனியா நெழுக்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் திருமணம் முடித்து இளவாலைப் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். சுபாகரன் சுமதி (வயது 24 )என்பவரே தற்கொலை செய்துள்ளார். இவருடைய கணவரான சிவபாதம் சுபாகரன்(வயது 23) என்பவரே ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
மனைவி தற்கொலை! கணவனும் தற்கொலை செய்ய முயற்சி!
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 10:24.55 AM GMT ]
சுபாகரன் சுமதி (வயது 24 ) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
இவரது கணவனை இளவாலை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த நிலையில் குறிந்த பெண் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருதாவது,
வவுனியை சேர்ந்த சுபாகரன் என்பவருக்கும் இளவாலையை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுக்கு கடந்த எட்டு மாதங்களுக்க முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் இளவாலைப் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் மனைவியின் நகையை அடைவு வைத்தமை தொடர்பில் மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாமியார் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய மருமகன் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையிலேயே குறித்த நபரின் மனைவி இன்று காலை தூக்கிட்டு மரணம் அடைந்துள்ளார்.
அதேவேளை மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுபாகரனுக்கு தெரியவர அவரும் தன்னைத் தானே தாக்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த நபர் ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment