Saturday, April 4, 2015

இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றம்! பாரதீய ஜனதாக் கட்சி மகிழ்ச்சி!


இலங்கை தொடர்பில் இந்திய பாரதீய ஜனதாக் கட்சி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
பெங்களுரில் நடைபெறும் இரண்டு நாள் தேசிய மாநாட்டின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் போரின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்கள் தொடர்பில் உள்நாட்டு அரசியல் கருதி முன்னைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இதன் காரணமாக இரண்டு நாட்டு உறவுகளிலும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையுடனான உறவை புதுப்பிக்க இந்திய பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ளதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மோடியை பொறுத்தவரை இராஜதந்திர வெற்றி என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment