முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்சவின் நீலப்படையணி வலுவிழந்த நிலையில் அவ் அணி கலைக்கப்படுவதாகவும் அதில் அங்கத்தவர்களாக உள்ளவர்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியில் இணையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் அவ் அணியை சேர்ந்த பிரதியமைச்சர் சாந்த பண்டார இந்த தகவலை அறிவித்துள்ளார்.
ராஜபக்சவினரின் தோல்வியை அடுத்து நீலப்படையணியில் உள்ளவர்கள் பலரும் அவ் அணியியை விட்டு விலகியுள்ளதுடன் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளனர்..
நாடு முழுவதும் நாமல் ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீலப்படைணயினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அரசியல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட நீலப்படையினர் மக்களை கலைஞர்களை அரசியல் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ராஜபக்சவினர் ஆட்சிக்காலத்தில் மேற்கொண்டனர்.
இதேவேளை வடக்கில் நாமல் ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பல இளைஞர்கள் நீலப்படையணி என்ற பெயரில் வரவழைக்கப்பட்டதுடன் வடக்கிலிருந்தும் சிலர் திரட்டப்பட்டிருந்தனர்.
குறிப்பாக மகிந்த ராஜபக்சவின் வடக்கு விஜயங்களின்போது இவர்கள் ஆட்சேர்ப்பாளர்களாக ஈடுபடுத்தப்பட்டதுடன் அரங்கின் முன்பாக கூட்டத்தினராகவும் இருத்தப்பட்டனர்.
மகிந்த ராஜபக்சவினரின் தோல்வியை தொடர்ந்து நாமல் ராஜபக்சவின் அரசியல் இயக்கமாக தோற்றுவிக்கப்பட்ட நீலப்படையணி பெரும் அதிர்ச்சியையும் சரிவையும் அடைந்திருந்தது.
இந்த நிலையில் நீலப்படையணியை கலைத்துவிட்டு அதில் எஞ்சியிருப்பவர்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்ட நிலையிலேயே அவ் அணி குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது.

No comments:
Post a Comment