Monday, January 5, 2015

பீர் டின்களில் மகாத்மா காந்தி: மன்னிப்பு கேட்ட அமெரிக்கா!

பீர் டின்களில் காந்தி படத்தை அச்சிட்டு வெளியிட்டதற்காக அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனமான 'நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி' சமீபத்தில் 'காந்தி பாட்' என்ற பெயரில் டின் பீர் ஒன்றை அறிமுகம் செய்தது.
மேலும் அந்த பீர் டின்களில் மகாத்மா காந்தி படமும் அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் ஆந்திர மாநிலம் நம்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜனார்த்தன் கவுடா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி மகாத்மா காந்தியின் படங்களை பீர் டின் மற்றும் பாட்டில்களில் உபயோகித்ததற்காக இன்று மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், இளைய தலைமுறையினரிடம் அவரது புகழை கொண்டு சேர்க்கும் எண்ணத்திலேயே இதைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

http://www.newindianews.com/view.php?20360442200mmDf44ea4mOll4cbbWgAKdddcKAMQAdbccnlOOee43DDmY3e022A40023

No comments:

Post a Comment