Wednesday, December 17, 2014

நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பு: 18 வருடங்களின் பின் அம்பலம்!

சீனாவில் தவறு செய்யாத நபருக்கு மரண தண்டனை விதித்து, தூக்கிலிடப்பட்ட சம்பவம் 18 வருடங்களின் பின் அம்பலத்திற்கு வந்துள்ளது.
சீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் 1996-ம் ஆண்டு ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
அந்தப் பெண்ணை கொலை செய்ததாக 18 வயதான ஹூக்ஜுலிட்டு என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, அவர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்.
எனினும் அந்த பெண்ணை கொலை செய்தது வேறு ஒருவர் என தற்போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்தது. அதில் ஹூக்ஜுலிட்டு அந்த பெண்ணை கொலை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது.
18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உண்மை வெளியே வந்துள்ளது. இதனால் ஹூக்ஜுலிட்டு குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
ஹூக்ஜுலிட்டு குற்றவாளி அல்ல என இப்போது நீதிமன்றம் கூறி இருக்கும் உத்தரவை குடும்பத்தினர் கிழித்து எறிந்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment