இன்றைய Tamil The Hindu தமிழ் ஹிந்துவில் வ உ சி யின் மறைந்த தினமான இன்று @ரெங்கையா முருகன் எழுதிய வ உ சி யின் வலாற்று கட்டுரை ஓன்று பதிவு செய்யப்பட்டுள்ளது..
அதில் வ உ சி வெள்ளையர்களுக்கு எதிராக கப்பல் கம்பனி தொடங்க ஆலோசித்து பொருளாதாரம் திரட்டும் முயற்சியில் இறங்கிய போதும் பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் கப்பல் கம்பனி ஆரம்பிக்க ரூபாய் இரண்டு லட்சம் தேவை என்று எழுதிய போதும் பிரிந்ததோ வெறும் 200 ரூபாய் மட்டுமே.. விஜயாசாரியார் அதற்காக நிதி திரட்டினார்...ராஜாஜி ரூபாய் 1000 உதவி வழங்கினார் என்ற தகவல்கள் எல்லாம் மிகவும் நியாபகமாக பதிவு செய்ய பட்டுள்ளது .
ஆனால் முக்கியமாக 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் துவங்கும் போது இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு முதன் முதலில் நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் என்பது ஏனோ மறைகபட்டுள்ளது.இது ஏதோ தவறுதலாக மறந்தது போல் தெரியவில்லை. ஏன் என்றால் இந்த கப்பல் கம்பனியின் ஆணி வேறே ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் தான் அவர் இல்லை என்றால் இந்த 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' கம்பனியே இல்லை என்பது தான் உண்மை. 1000 ரூபாய் கொடுத்த ராஜாஜியை மறக்காமல் குறிப்பிட்ட கட்டுரை ஆசிரியர் இருபது லக்சம் கொடுத்தவரை மறந்தது அல்லது மறைத்தது எப்படி? இதை போன்று இன்னும் நிறைய முஸ்லிம்களின் தியாகங்கள் வேண்டும் என்றே தொடர்ந்து மறைக்கப்பட்டு கொண்டே வருகின்றது.
"இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் துவங்கும் போது பொருளாதாரா . இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது பாரதியார் குறிப்பிட்ட ரூபாய் இரண்டு லட்சத்தை அவருக்கு முதன் முதலில் கொடுத்து நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது ராவுத்தர் சேட் ஆவார். ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார். அதிக பங்குகளை வாங்கிய காரணத்தினால் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்". :-சீனிவிஸ்வநாதன் 'சுதேசியத்தின் வெற்றி' நூலில்
இவ்வாறு வ.உ.சியின் இமாலய முயற்சிக்கு அடித்தாங்கல்களாக பல முஸ்லிம் பெருமக்கள் இருந்துள்ளனர். வ.உ.சியின் முயற்சியை - தியாகத்தை மதிக்கும் நம் ஆதங்கமெல்லாம், கப்பல் ஓட்டிய தமிழனின் புகழைப் பேசும் போதெல்லாம் 'கப்பல் வாங்கித்தந்த தமிழன்' ஹாஜி. பக்கீர் முகம்மது சேட்டையும் கொஞ்சம் சேர்த்துப் பேசுங்களேன் என்பதுதான் பேசுமா Tamil The Hindu .
No comments:
Post a Comment