Saturday, November 1, 2014

பிரான்ஸ் அணு நிலையம் மேல் பறந்த ஆளில்லா விமானம் அல்-கைடாவின் விமானமா ?


பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு நிலையம் ஒன்றின் மேல் ஆளில்லா, விமானம் ஒன்று பறந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சின் பாதுகாப்பு அமைச்சு இதுதொடர்பாக விசாரணைகள் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது. இது இவ்வாறு இருக்க மேலதிக தகவல்கள் இது தொடர்பாக வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் மொத்தமாக 7 அணு மின் நிலையங்கள் உள்ளதாம். இவை அனைத்திற்கும் மேலாக இவ்வாறான ஆளில்லா விமானம் பறந்துள்ளது என வேவ்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இன் நிலையில் இதனை சர்வசாதாரணமாக விட்டுவிட முடியாது என்று பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அல்-கைடா மற்றும் ஐ.எஸ் -ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் நிலைகள் மீது பிரான்ஸ் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதில் தாக்குதல் நடத்த இஸ்லாமிய தீவிரவாதிகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு நிலைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. 

No comments:

Post a Comment