Friday, November 7, 2014

சிறை அதிகாரிகள் "செக்ஸ் படம்" பார்க, கைதி மாரடைப்பால் மரணம் !

பிரிட்டனில் பொலிசார் செக்ஸ் படத்தை பார்த்துக்கொண்டு இருக்க, சிறையில் உள்ள கைதி மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆகஸ்ட் மாதம் 2010 ம் ஆண்டு , லொயிட் பட்லர் என்னும் 39 வயதுடைய நபர், குடிபோதையில் இருந்ததாகவும் அவர் சமூகத்திற்கு கேடு விளைவிக்கலாம் என்ற சந்தேகத்திலும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மிட்லான் பொலிசாரே அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். இவ்வாறு சிறையில் அடைக்கப்படும் கைதிகளை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு தடவை பொலிசார் பார்கவேண்டும் என்பது விதிமுறையாகும். அறையில் உள்ள கைதி எப்படி இருக்கிறார் என்று அடிக்கடி பார்த்து அதனை பதிவுசெய்யவேண்டும்.
ஆனால் பிரித்தனைய (மிட்லன்) பொலிசார் , பொலிஸ் நிலையத்தில் உள்ள கம்பியூட்டரில் அன்றைய தினம் இரவு செக்ஸ் படங்களைப் பார்த்துள்ளார்கள். இதனால் அவர்கள் கைதிகளை கவனிக்கவில்லை. இதேவேளை அளவுக்கு அதிகமாக மது அருந்திய பட்லருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையில் இறந்துவிட்டார். பின்னரே பொலிசாருக்கு அவர் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க தனியான பிரிவு ஒன்றை அரசாங்கம் நியமித்தது.
அவர்கள் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், அதிக மது போதையில் தான் பட்லர் இறந்தார் என்றும் , அதற்கு பொலிசார் காரணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். இதனால் செக்ஸ் படம் பார்த்த பொலிசாரின் வேலை பறிபோகவில்லை. இருப்பினும் பொலிசார் மிகவும் மோசமாக நடந்துள்ளதாகவும், அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிவிட்டதாகவும் சிறையில் இறந்துபோன பட்லரின் தாயாட் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1392.html

No comments:

Post a Comment