Friday, November 21, 2014

பிரதமர் ராஜினாமா! புதிய பிரதமர் கோத்தா?

எதிர்க்கட்சிகளிடம் தகுதியானவர்கள் இல்லை என்பதால் சுதந்திரக் கட்சியில் இருந்து வேட்பாளரை தெரிவு செய்துள்ளனர்: லலித் திஸாநாயக்க
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 12:12.22 PM GMT ]
எதிர்க்கட்சிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது சுதந்திரக் கட்சியில் இருந்து வேட்பாளரை தெரிவு செய்துள்ளதாக பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய தகுதியானவர்கள் இல்லை. இதனால் ஆளும் கட்சியில் இருந்து வேட்பாளரை தெரிவு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் இயலாமை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhu4.html


ராஜபக்ஷவினர் எங்களையும் அவர்களை போல் எண்ணி விட்டனர்: ரஜீவ விஜேசிங்க- விமலின் கோரிக்கையை நிராகரித்த மைத்திரி
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 12:43.42 PM GMT ]
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோரின் வித்தியாசங்கள் பற்றி ராஜபக்ஷவினருக்கு தெரியாது என ஆளும் கட்சியில் இருந்து விலகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்படும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரஜீவ விஜேசிங்கவுக்கு உத்தியோகபூர்வ வாகனத்தை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து குறுஞ் செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், எமக்கும் ராஜபக்ஷவினருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
தம்மை போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என்று கணித்து ஏனையோரும் திருடர்கள், மோசடியாளர்கள் என நினைத்தன் காரணமாக நாட்டை இன்று பெரும் அனர்தத்திற்குள் கொண்டு வந்து விட்டுள்ளனர்.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட சகலவற்றையும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ஸவின் கோரிக்கை நிராகரித்த மைத்திரி
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட உள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தான் முன்வந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் விமல் வீரவன்ஸ விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ஸ கலந்து கொண்டுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுசில் பிரேமஜயந்த, விமல் வீரவன்ஸ, குமார் வெல்கம ஆகிய அமைச்சர்கள் மாத்திரமே கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhu6.html


பிரதமர் ராஜினாமா! புதிய பிரதமர் கோத்தா?
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 12:26.19 PM GMT ]
பிரதமர் டீ.எம். ஜயரத்தினவை தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உடனடியாக அவரை தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
தொலைபேசி வழியாக பிரதமர் டீ.எம். ஜயரத்தினவை தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த, அரசாங்கத்தின் தற்போதைய நெருக்கடியான நிலையில் செயற்திறன் மிக்க பிரதமர் ஒருவர் அவசியம் என்பதை கடும் வார்த்தைகளால் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே தான் பதவியிலிருந்து தூக்கி எறிய முன்னர் உடனடியாக பதவியை ராஜினாமாச் செய்து மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமாறும் ஜனாதிபதி பிரதமர் டீ.எம். ஜயரத்தினவிடம் தெரிவித்துள்ளார்.
இதன் போது பிரதமர் டீ.எம். ஜயரத்தின மற்றும் ஜனாதிபதி மஹிந்தவுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்ய தற்போது டீ. எம். ஜயரத்தின இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும் அதற்காக இரண்டொரு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்.
காலியாகப் போகும் பிரதமர் பதவிக்கு பெரும்பாலும் கோத்தபாய  ராஜபக்ஷ நியமிக்கப்படலாம் என்று தெரிய வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhu5.html



No comments:

Post a Comment