Friday, November 21, 2014

மகிந்த அரசாங்கம் பாரிய தவறை செய்துள்ளது- 17வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி 18வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும் மைத்திரிபால சிறிசேன

ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார ஆளுங்கட்சியில் இணைவு- மாலைக்குள் இணைவோருக்கு 150 கோடி ரூபா
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 10:35.43 AM GMT ]
ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார சற்று முன்னர் அலரிமாளிகைக்கு வருகை தந்துள்ளார்.
இவர் தனது கட்சியை விட்டு ஆளுங்கட்சியில் இணைந்து கொள்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சுப் பதவியொன்றுக்கும் நியமிக்கப்படவுள்ளார்.
நேற்று மாலை பாலித ரங்கே பண்டாரவுக்கும் , அமைச்சர் பசில் ராஜபக்ஷவுககும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது 25 கோடி ரூபா கைமாறியதை அடுத்தே பாலித ரங்கே பண்டார ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ள தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு ஐம்பது கோடி விலை பேசப்பட்ட போதிலும் அவர் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ள மறுத்துள்ளார்.
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 150 கோடி பேரம்?
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சிக்கு இழுத்தெடுக்கும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
இன்று மாலைக்குள் ஆளுங்கட்சியுடன் இணைந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 150 கோடி வீதம் அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் ஜனாதிபதி தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஒரு குழு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


Video BBC

Video BBC

Video bbc

மகிந்த அரசாங்கம் பாரிய தவறை செய்துள்ளது- 17வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி 18வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும் மைத்திரிபால சிறிசேன
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 12:07.45 PM GMT ]
நாட்டின் இன்றைய அரசாங்கம் 18வது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டு பாரிய தவறை செய்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை எண்ணி தேசிய மருந்து கொள்கை ஒன்றை கொண்டு வரும் கடும் முயற்சிகளை எடுத்தேன் ( கண்களில் கண்ணீர்). ஆனால் முடிவில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை 100 நாட்களுக்கு ஒழிக்க எனக்கு அதிகாரத்தை வழங்குமாறு மக்களிடம் கோருகிறேன்.
நாட்டு மக்கள் வாழ்வதற்கு சிறந்த பொருளாதாரம் இல்லை. நான் அங்கம் வகிக்கும் பிரதேச விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
நான் பொது வேட்பாளராக போட்டியிடுவேன். முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சுதந்திரமான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
சுதந்திரமான ஊடகம், ஊடகவியலாளர்கள் இந்த நாட்டில் சந்தர்ப்பம் இல்லை என்பதை எமது சகோதர ஊடகவியலாளர்களுக்கு தெரியும். ஊடக சுதந்திரம் புதைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தேர்தல் அதிகாரத்திற்கு வரும் எமது அரசாங்கத்தின் கீழ் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என உறுதியளிக்கின்றேன். ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான சமூகத்தை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளேன்.
17வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி 18வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்படும்.
எனது இந்த பயணத்திற்காக உதவிய சகோதர அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரத்ன தேரர், சோபித தேரர் உட்பட அனைவருக்கும் கௌரவமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் மறந்து விட முடியாது.
எதிர்வரும் தேர்தல் வெற்றிக்காக நாளுக்கு நாள் நாங்கள் அடியெடுத்து வைப்போம். மக்களின் பிரார்த்தனை நிறைவேற அர்ப்பணிப்போம். இந்த சந்தர்ப்பத்தில் எனது மனைவி பிள்ளைகள் குறித்து ஞாபகப்படுத்த விரும்புகிறேன் (கண்களில் கண்ணீர்).
ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் கௌரவமான வாக்குகளில் நான் வெற்றி பெறுவேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


Video BBC

Video BBC

Video bbc

No comments:

Post a Comment