இவருக்கும், வரங்கல் போலீஸ் நிலையத்தில் பெண் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கவிதாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீண்ட காலமாக கள்ள தொடர்பு இருந்தது.
பெண் சப்–இன்ஸ்பெக்டர் கவிதா திருமணம் ஆனவர். கணவர் பெயர் சுனில்ரெட்டி. சென்னையில் உள்ள நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
மனைவியின் நடத்தையில் சுனில்ரெட்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் சுவாமியுடன் அவர் நெருங்கி பழகுவதை அறிந்தார். அவர்களை கையும் களவுமாக பிடிக்க சுனில்ரெட்டி திட்டமிட்டார்.
இந்த நிலையில் சுவாமியும், கவிதாவும் சட்டசபை பாதுகாப்பு பணிக்காக ஐதராபாத் அனுப்பப்பட்டனர். சுவாமிக்கு சாய்பாபாத்தில் உள்ள துவாரகா லாட்ஜில் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. கவிதாவுக்கு அபிட்ஸ் பகுதியில் உள்ள பிருந்தாவன் ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.
இரவு சுவாமி, கவிதா தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்றார். அங்கு அவர் கவிதாவுடன் உல்லாசத்தில் இருந்தார்.
இந்த நிலையில் ஓட்டலில் மனைவி என்ன செய்கிறாள் என்பதை அறிய கணவர் சுனில்ரெட்டி திட்டமிட்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானத்தில் ஐதராபாத் பறந்தார். இரவு 11 மணி அளவில் தனது மனைவி தங்கியிருந்த லாட்ஜிக்கு போலீசாருடன் சென்று அறைக்கதவை தட்டினார். உள்ளே இருந்த சுவாமி அரை நிர்வாணத்துடன் வந்து கதவை திறந்தார்.
தனது கள்ளக்காதலி கவிதாவின் கணவர் நிற்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் சட்டையை மாட்டி கொண்டு ஓட்டம் பிடித்தார்.
திருடன்தான் ஓடுகிறான் என்று சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து சுனில்ரெட்டி அபிட்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் இன்ஸ்பெக்டர் சுவாமியை கைது செய்தனர். அவர் மீது விபசாரம் மற்றும் மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அபிட்ஸ் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் உதய் தெரிவித்தார்.
பெண் சப்–இன்ஸ்பெக்டர் கவிதா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதுபற்றிய விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.
No comments:
Post a Comment