இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஏமி சைல்ட்ஸ் எபோலா வைரஸை இசைக்குழு என்று நினைத்து பேசியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
லண்டனில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஏமி சைல்ட்ஸ்(24) சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்துள்ளார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் ஏமியிடம் மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் பலியாக காரணமான எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோமா என்று கேட்டுள்ளார்.
இந்நிலையில், ஏமிக்கு எபோலா என்றால் என்னவென்று தெரியாமல் விழித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர், எபோலா பெரிய விடயமாகப் போகிறது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஏமி, எபோலா என்றால் வளர்ந்து வரும் இசைக்குழு என்று நினைத்துக் கொண்டதோடு, இன்றில் இருந்து நான் அந்த குழுவின் பெரிய ரசிகை என்றும், அது அருமை என்று நினைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகையே பீதியடைய வைத்துள்ள உயிர்கொல்லி எபோலா வைரஸ் பற்றி ஏமிக்கு தெரியாதது நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வியக்க வைத்துள்ளது.
|
No comments:
Post a Comment